Animal movie: அதிரடி காட்டும் அனிமல் வசூல்.. அடுத்த சூப்பர்ஸ்டாரா ரன்பீர் கபூர்?

சென்னை: நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி ரிலீசாகியுள்ளது அனிமல் படம்.

அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை கொடுத்திருந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிரட்டி வருகிறது. படத்தில் ரன்பீர் கபூர் கேரக்டர் அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Actor Ranbir Kapoors Animal movie collects more than 400 crores in just 4 days

அனிமல் படம்: நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது அனிமல் படம். இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை இயக்கியு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக ரன்பீர் கபூரின் கேரக்டர் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகின்றன. படத்தில் ரன்பீர் மற்றும் ராஷ்மிகாவிற்கு நெருக்கமான காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன.

ரன்பீர் -ராஷ்மிகா ஜோடி: இருவருக்கும் அதிகமான முத்தக்காட்சிகள் காணப்படுகின்றன. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பை ரன்பீர் கபூரின் மனைவியும் பிரபல பாலிவுட் ஹீரோயினுமான ஆல்யா பாராட்டியுள்ளார். ராஷ்மிகா படத்தில் மிகவும் அழகாக இருப்பதாக அவர் கமெண்ட் செய்துள்ளார். மேலும் ரன்பீர் -ராஷ்மிகா இருவருக்கும் படக்குழுவினருக்கும் ஆல்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா: இதனிடையே அர்ஜுன் ரெட்டி என்ற மிரட்டலான படத்தை கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள அனிமல் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 410 கோடிகளை தாண்டியுள்ளது. வட இந்தியாவில் மட்டும் படத்தின் வசூல் 250 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சூப்பர்ஸ்டார்: படம் ஷாருக்கான், சல்மான்கான் படங்களின் வசூலையை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர்தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற ஒரு கேரக்டர் உண்மையில் இருக்கக்கூடாது என்றும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தக் கேரக்டருக்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

பான் இந்தியா படம்: தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை லீட் கேரக்டரில் வைத்து அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை கொடுத்தார் சந்தீப் ரெட்டி வங்கா. இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் களமிறங்கிய அவர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா, அனில் கபூர் உள்ளிட்டவர்களை லீட் கேரக்டரில் வைத்து அனிமல் படத்தை கொடுத்துள்ளார். பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் படம் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்துவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X