பாக்கியலட்சுமி தொடரில் இணையும் நடிகர் ரஞ்சித்.. என்ன கேரக்டர்னு பார்க்கலாமா?
சென்னை : விஜய் டிவியின் முதன்மை தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர்.
இந்தத் தொடரில் பாக்கியா -கோபி மற்றும் ராதிகா என முதன்மை கேரக்டர்களையும் அவர்களை சுற்றிய உறவுகளையும் கொண்டு கதைக்களம் நகர்ந்து வருகிறது.
குழந்தை பெறும் நிலையில் தன்னுடைய மகன் உள்ள நிலையில், தன்னுடைய இரண்டாவது திருமணத்தை செய்துக் கொள்ளும் கோபியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த தொடர் சிறப்பாக காட்சிப் படுத்தி வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிறவைக்கும் வகையில் கொடுத்து வருகிறார் இயக்குநர். கோபி -பாக்கியா -ராதிகா என மூன்று முதன்மை கேரக்டர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு எபிசோட்களை கொடுத்து வருகிறார்.

காலம்கடந்த திருமணம்
தன்னுடைய மூத்த மகன் செழியனுக்கு குழந்தைப் பிறக்கும் நிலையில், தன்னுடைய இரண்டாவது திருமணத்தை செய்துக் கொள்கிறார் கோபி. தன்னுடைய மனைவியை ஏமாற்றி விவாகரத்து பெற அவர் நினைக்கும் நிலையில், உண்மையை அறிந்துக் கொள்ளும் பாக்கியா, தானே முன்வந்து விவாகரத்தை கொடுக்கிறார்.

ராதிகா -கோபி திருமணம்
தொடர்ந்து தான் காதலிக்கும் ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ளம் கோபி, அதன்மூலம் சந்திக்கும் நிதி பிரச்சினைகள் மற்றும் இரு குடும்பத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் சூழல்களை காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர். பாக்கியாவை ஏமாற்றி அவர் ராதிகாவை திருமணம் செய்த நிலையில், அவர் படும் பாடுகளை ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள்.

பாக்கியாவிடம் சவால்
இந்நிலையில், தான் கட்டிய வீட்டை விட்டு வெளியேறுமாறு பாக்கியா மற்றும் தன்னுடைய மகன்களை கோபி கோபத்துடன் கூறுகிறார். இதை சவாலாக ஏற்கும் பாக்கியா, தான் கஷ்டப்பட்டு கேட்டரிங் கான்டிராக்ட் எடுத்து 2 லட்சம் ரூபாயை இனிஷியல் தொகையாக தன்னுடைய கணவனுக்கு கொடுக்கிறார்.

பாக்கியாவை அவமானப்படுத்தும் ராதிகா
தொடர்ந்து ராதிகா வேலை செய்யும் அலுவலகத்திலேயே கேன்டீன் கான்டிராக்டையும் எடுக்கிறார். அங்கு அவரை ஏளனம் செய்யும்வகையில், ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்துகிறார் ராதிகா. இதையடுத்து ஆங்கிலம் கற்பதற்கான வகுப்பிலும் சேர்கிறார் பாக்கியா.

சீரியலில் இணைந்த ரஞ்சித்
இதனிடையே தொடரில் புதிய வரவாக பழனிச்சாமி என்ற கேரக்டரில் இணைந்துள்ளார் நடிகர் ரஞ்சித். இன்று முதல் இவரது கேரக்டர் சீரியலில் இணையவுள்ளது. ஆங்கிலம் கற்பதற்கான வகுப்பில் சேரும் பாக்கியாவை பேச சொல்ல, அவர் அரைகுறை ஆங்கிலத்தில் பேச அவருக்கு சப்போர்ட் செய்கிறார் ரஞ்சித்.

தன்னந்தனியாக போராடும் பாக்கியா
தொடர்ந்து சீரியலில் ரஞ்சித்தின் கேரக்டர் பாக்கியாவிற்கு எந்த அளவிற்கு சப்போர்ட்டாக இருக்கும் என்பதாக கதை நகரும் என்று எதிர்பார்க்கலாம். கணவனை விவாகரத்து செய்துவிட்டு, தன்னந்தனியாக வாழ்க்கையில் முன்னேற போராடிக் கொண்டிருக்கும் பாக்கியாவிற்கு அவருடைய மகன் எழில் சப்போர்ட்டாக இருக்கும் நிலையில், தற்போது ரஞ்சித்தும் அதில் இணையவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











