நடிகர் ரஞ்சித்துக்கு 2வது திருமணம்.. நித்தியானந்தா சிஷ்யை நடிகை ராகசுதாவை மணந்தார்!

By Siva

சென்னை: நடிகை ராகசுதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் பிரபல நடிகர் ரஞ்சித்.

‘மறுமலர்ச்சி', ‘பாண்டவர் பூமி', ‘நட்புக்காக', ‘வள்ளுவன் வாசுகி', பெருசு, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

ரஞ்சித்துக்கும் நடிகை பிரியாராமனுக்கும் 1999 - ல் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றம் மூலம் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

Actor Ranjith marries actress Ragasudha

ரஞ்சித் - ராகசுதா

பின்னர் ரஞ்சித்துக்கும் நடிகை ராகசுதாவுக்கும் காதல் மலர்ந்தது.

‘தங்கத்தின் தங்கம்' படத்தில் ராமராஜன் ஜோடியாக அறிமுகமானவர் ராகசுதா. ‘தமிழச்சி', ‘ஜல்லிக்கட்டு காளை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆன்மீகம்

ஒருகட்டத்தில் நடிப்பிலிருந்து விலகி நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான கே.ஆர்.சாவிரித்தியின் மகள் ஆவார்.

திருமணம்

ரஞ்சித்- ராகசுதா திருமணம் இன்று காலை திருவேற்காடு கோவிலில் உள்ள மண்டபத்தில் நடந்தது. வைதீக முறைப்படி ராகசுதாவுக்கு ரஞ்சித் தாலி கட்டினார்.

கே ஆர் விஜயா

நடிகை கே.ஆர்.விஜயா, அவரது கணவர் வேலாயுதம், நடிகைகள் யுவராணி, அர்ச்சனா, பானுப்ரியா, பின்னணி பாடகி ஹேமா, டாக்டர் ராஜன், தயாரிப்பாளர்கள் பத்மாவாசு, நடிகர்கள் வி.சி.ஜெயமணி, ரகுநாத், ராகசுதாவின் தங்கை நடிகை அனுஷா, அவரது கணவர் சரவணன், கே.ஆர்.விஜயாவின் தம்பி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X