Happy Street ஒரு கலாச்சார சீர்கேடு நிகழ்வு.. எங்கிட்ட பவர் இருந்தா நடக்குறதே வேற.. பொங்கிய ரஞ்சித்!

சென்னை: மதுரை, கோவை, சேலம், திருச்சி என சென்னையை தாண்டி பல மாவட்டங்களிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரம் ஒவ்வொரு வார விடுமுறையின் போதும் களைகட்டி வரும் நிலையில், அதற்கு எதிராக நடிகர் ரஞ்சித் குரல் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலாச்சாரத்தையே சீரழிக்கும் நிகழ்வாக ஹேப்பி ஸ்ட்ரீட் உள்ளது என்றும் பெண்கள் அரைகுறை ஆடையுடன் அதில் கலந்து கொண்டு எந்த ஆணுடனும், எந்த பெண்ணுடனும் ஆடலாம் என்கிற நிலை உருவாகி இருப்பது தமிழ் கலாச்சாரம் சீரழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறி என தனது கருத்தையும் கண்டனத்தையும் முன் வைத்துள்ளார்.

Actor Ranjith slams Happy Street events and he says it will destroy our culture

நடிகர் ரஞ்சித்: ரஞ்சித் என்றதுமே பா. ரஞ்சித் என நினைத்து விட வேண்டாம். இவர் தமிழ் சினிமாவில் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் தற்போது சின்னத்திரை நடிகராகவும் வலம் வரும் நடிகர் ரஞ்சித். பொன் விலங்கு படத்தில் அறிமுகமானவர் மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், மறுமலர்ச்சி, நட்புக்காக, பசுபதி கேர் ஆஃப் ராசக்கா பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இரண்டு முறை விவாகரத்து: ரோசப்பூ சின்ன ரோசப்பூ என சரத்குமார் பார்த்து பாடினாரே அந்த பிரியா ராமனை 1999ல் திருமணம் செய்துக் கொண்ட ரஞ்சித் 2014ல் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் ராகசுதா எனும் நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இவர், 2015ல் அவரையும் விவாகரத்து செய்து விட்டார். தற்போது செந்தூரப்பூவே மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வருகிறார்.

ஹேப்பி ஸ்ட்ரீட்டில் ஆபாசம்: இந்நிலையில், சமீபத்தில் பாரம்பரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித் தமிழ் மக்கள் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறந்து வருகின்றனர் என்றும் ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகள் கலாச்சாரத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கின்றன என்றார். ஆரம்பத்தில் செல்போன் கம்யூனிகேஷனுக்காக என சொல்லப்பட்டது. ஆனால், இப்போ அதில் தான் ஆன்லைன் மோசடி வரை ஆபாச படங்கள் வரை என இளைஞர்களை கெடுத்து வருகிறது என்றார். மேலும், தன்னிடம் பவர் இருந்தா அவர்களை எல்லாம் ஆயுள் கைதியாக மாற்றி விடுவேன் என்றும் கொந்தளித்தார்.

பூமர் கமெண்ட்: நடிகர் ரஞ்சித் சொல்வது சரியான ஒன்று தான் என சில ரசிகர்களும், பூமர் என சில இளைஞர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காலையில் இருந்து இரவு வரை செல்போன் நோண்டும் இளைஞர்களுக்கு எங்கே இருந்து வருகிறது ஸ்ட்ரெஸ் என்றும் ரஞ்சித் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X