இப்போ இருக்கும் பசங்க ஆபாச படம் பார்த்து கெட்டுப்போறாங்க.. ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!
சென்னை: இப்போ இருக்க பசங்கள் ஆபாச படமா பார்த்து கெட்டுப்போறாங்க, அவங்களால் 10 நிமிஷம் கூட போன் இல்லாமல் இருக்க முடியவில்லை என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பீஷ்மர் படத்திற்கு பிறகு படங்களை இயக்கமால் இருந்த நடிகர் ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் ரஞ்சித் கே.எஸ். ராஜ்குமார் இயக்கிய பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆர்.கே.செல்வமணி தயாரித்த இந்த படத்தில், ரஹ்மான், சிவரஞ்சனி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், சேரனின் பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, தேசிய கீதம் மற்றும் புதுமை பித்தன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித்: நடிகராக இருந்த ரஞ்சித் 2003ம் ஆண்டு பீஷ்மர் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, பணப்பற்றாக்குறையால் அடுத்த படத்தை இயக்காமல் இருந்த ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது.
ஆபாச படம் பாக்குறாங்க: திருப்பூரில் நடைபெற்ற கிராமிய நிகழ்ச்சியைப் பார்த்து வியந்த நடிகர் ரஞ்சித், பெண் குழந்தைகளை இப்படி பார்ப்பதற்கு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் லைக்குக்காகவும் பணம் சம்பாதிக்கவும் கண்டதை பகிர்ந்து வருகிறார்கள். இப்போ இருக்க பசங்கள் ஆபாச படமா பாத்து கெட்டுப்போறாங்க, அவர்களால் 10 நிமிஷம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாது. கையில் போன் இல்லை என்றால் அவர்களின் கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும். பெற்றோர் குழந்தைகள் கேட்டார்கள் என்பதற்கான கஷ்டப்பட்டு செல் போனை வாங்கித் தருகிறார்கள். ஆனால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று நடிகர் ரஞ்சித் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











