கைவிட்டு போன கணவன்.. குமுறி அழும் ஆர்த்தி.. கெனிஷாவின் இன்ஸ்டா போஸ்டை பாருங்க!

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் ஒரே மகளான ப்ரீத்தாவின் திருமணம் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தது. இதில், ரஜினி, கமல், பிரபு, சுந்தர் சி, குஷ்பு, ராதிகா என பல பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் வந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் கிண்டலாக ஒரு பதிவினை போட்டுள்ளார்.

ஜெயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவான அறிமுகமான ரவி, அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். அந்த படத்தை தொடர்ந்து அண்ணன் இயக்கிய சில ரீமேக் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அப்போது, தான் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு காலம் இணைபிரியா தம்பதிகளாக இருந்த இவர்களின் உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது.

ரவி மோகன்: இதையடுத்து, நடிகர் ரவி மோகன், தனது இன்ஸ்டாகிராமில், தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில், அடுத்த சில நாட்களிலேயே, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆண்டு பதிவு செய்த திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரி இருந்தார்.

நல்ல நட்பு: இதைத்தொடர்ந்து, ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், ரவியின் இந்த முடிவு தனிச்சையானது என்றும், இது பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவரை நான் ஒரு முறை சந்தித்து பேச வேண்டும், ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை, என்னை சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்த நேரத்தில் தான் பாடகி கெனிஷாவுடன், ஜெயம் ரவி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் கிசுகிசு பரவியது. மேலும், இருவரும், கோவாவில், வேகமாக காரை ஓட்டி அபராதம் விதித்ததற்கான ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா பற்றி யாரும், தவறாக பேச வேண்டாம். அவர் ஹீலிங் மையம் நடத்தி வருகிறார். அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு தான் என கூறியிருந்தார்.

ஜோடியாக வந்தனர்: மேலும், ஆர்த்தி பாஸ்போர்ட் மற்றும் வங்கி புத்தகத்தை தரமறுப்பதாகவும், ரவியின் சொத்துக்களை அபகரித்து அவரை திருமண வாழ்க்கையில் மரியாதையின்றி நடத்தியதாகவும் இதனால், ரவி மோகன் விவாரத்து செய்ய முடிவு செய்ததாகவும் பல விதமான செய்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் சந்தித்து பேச நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கு நிலையில், தயாரிப்பாளர் ஐஷரி கணேஷின் மகளின் திருமணத்திற்கு ரவி மோகன், பாடகி கெனிஷாடன் ஜோடியாக கலந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் திருமணத்திற்கு வந்தது மட்டுமில்லாமல், புதுமண தம்பதிகள் போல, ஜோடியாக போட்டோவிற்கு போஸ் கொடுத்து இருந்தனர்.

ravi mohan Aarti Kenisha

ஆர்த்தி அறிக்கை: இது இணையத்தில் புயலை கிளப்பிய நிலையில், இவர்களின் வீடியோவை பார்த்த, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, கண்ணீருடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நான் ஒரு வருடமாக, ஒரு கவசம் போல் என்னுடைய மௌனத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். அதற்க்கு காரணம் நான் பலவீனமாளவள் என்பது இல்லை, என் மகன்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதால் தான். என் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு பழியையும், மோசமான விமர்சனங்களையும் நான் உள்ளே வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பதற்கு காரணம், உண்மையை சொல்ல வேண்டாம் என்பது கிடையாது. பெற்றோர்களுக்கிடையிலான அந்த சுமையை குழந்தைகள் சுமக்க வேண்டாம் என்பதற்காக தான் அமைதியாக இருந்தேன்.

ஏமாந்துவிட்டேன்: ஆனால், இன்று வெளியான வீடியோ மற்றும் போட்டோக்களை, அதற்கான தலைப்புகளையும் பார்த்தபோது, எல்லாம் வேறு மாதிரியாக தோன்றியது. 18 ஆண்டுகளாக என் அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் என்னை மட்டும் விட்டுச்செல்லவில்லை. பொறுப்புகளிலிருந்தும் விலகிச் சென்றுள்ளார்.
அவர் எனக்கு உண்மையாக இருந்திருந்தால், நான் முன்பே என் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்திருப்பேன். ஆனால், நான் கணக்குகளை விட அன்பைத் தேர்ந்தெடுத்தேன். பரிவர்த்தனையை விட நம்பிக்கையை தேடினேன். இறுதியில் இங்கு வந்து நிற்கிறேன்.

ravi mohan Aarti Kenisha

தாயாக பேசுகிறேன்: நான் அன்பாக இருந்ததற்காக நான் கவலைப்படவில்லை. ஆனால், என் காதல் மீண்டும் பலவீனமாகி விட்டது. என் குழந்தைகள் சிறு பிள்ளைகள், அவர்களுக்கு சட்டப்பிரிவுகளை புரிந்துகொள்ளும் வயது இல்லை. ஆனால், கைவிடப்பட்டதை புரிந்துகொள்ளும் வயது. பதிலளிக்கப்படாத அழைப்புகளும், ரத்து செய்யப்பட்ட சந்திப்புகளையும் அவர்கள் அறியும்போது அது அவர்கள் மனதில் காயங்களாக மாறிவிடும். இன்று நான் ஒரு மனைவியாகப் பேசவில்லை, ஒரு அநீதி இழைக்கப்பட்ட பெண்ணாகக் பேசவில்லை, தன் குழந்தைகளின் நலனை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு தாயாகப் பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால் அவர்களை என்றென்றும் இழந்துவிடுவேன் தனது வேதனையை கண்ணீருடன் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப்பார்த்த பலர், ஆர்த்திக்கு இணையத்தின் வழியாக ஆறுதல் கூறிவருகின்றனர்.

கெனிஷாவின் பதிவு: ஆர்த்தி தனது வாழ்க்கையை தொலைத்துவிட்டு கண்ணீருடன் புலம்பிக் கொண்டு இருக்க, பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை சில தத்துவங்களை அள்ளி வீசி உள்ளார். அதில், லட்சியவாதிகளுக்கு எப்போது இரு தேர்வுகள் தான் இருக்கின்றன. ஒன்று ஒரு நல்ல ஆதரவுள்ள துணை அல்லது துணையே இல்லாமல் இருப்பது என்றும், வெற்று அங்கீகாரங்களால் திருப்தி அடையாதவர்களுடனே அதிர்ஷ்டம் துணை நிற்கும் என்றும், கண்ணால் பார்க்க முடியாத ஒன்றை நம்பினால் தான் பார்க்க முடிந்த ஒன்றின் மேல் உங்களுக்கு கட்டுப்பாடு இருக்கும் என்று ஆர்த்தியை காயப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த பலர், ஒரு குடும்பத்தை கெடுத்து விட்டு தத்துவமா என கெனிஷாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X