விபத்தில் சிக்கிய குழந்தைகளை பார்க்க விடல.. கார் இன்சுரன்ஸ்க்கு கையெழுத்து கேட்ட ஆர்த்தி - ரவி மோகன் ஓபன்

சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. காரணம், இவர்கள் இருவரும் திருமணம் செய்து, 15 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு பிரிவதாக அறிவிப்பு வெளியானது. அதுவும் இந்த அறிவிப்பு ரவி மோகன் தரப்பில் இருந்து வெளியானது. கடந்த சில வாரங்களாகவே ரவி மோகனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இணையவாசிகளின் விமர்சனத்திற்கு தீனி போடும் விதமாக ஆர்த்தி வெளியிட்ட நீண்ட நெடிய அறிக்கை, பலருக்கும் ஷாக் கொடுத்தது. இந்நிலையில் நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை பலருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. அதில் அவர் தனது திருமண வாழ்க்கையில் தான் சகித்துக் கொண்ட விஷயங்கள் தொடங்கி, விவாகரத்து அறிவிப்புக்குப் பின் நடைபெற்ற சம்பவங்கள் வரை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Actor Ravi Mohan Slams and Share Shocking Informations His Ex Wife Aarti What She Did in Marriage Life

அதாவது, "விவாகரத்து அறிவித்து, நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னர், நமது நாட்டின் சட்டத்தின்படி எனது குழந்தைகள் அவரது தாயாருடன் இருந்து வருகிறார்கள். விவாகரத்து அறிவித்து ஒரு மாதத்திற்கு பின்னர் கிறிஸ்துமஸ் வந்தது. அப்போது நான் குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்று கேட்டதற்கு என்னை சந்திக்க விடவில்லை. ஆனால் எனது குழந்தைகள் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது என்ற தகவல் கேட்டு நான் மிகவும் பதறிப்போனேன். அவர்கள் சென்ற கார் எனது பெயரில் இருப்பதால், இன்சூரன்ஸ் செய்வதற்கு நான் கையெழுத்து போட வேண்டி இருந்தது. அதற்கு மட்டும் ஆர்த்தி தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. நான் இந்த சம்பவத்தில் இருந்து ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.

பரிதாபத்தை உருவாக்க வேண்டாம்: மேலும், எனது விவாகரத்தில் எனது குழந்தைகளை பொது வெளியில் காட்சிப் பொருளாக மாற்றுவதை நான் விரும்பவில்லை. அவர்களை பொது வெளியில் காட்டி, பரிதாபத்தை உருவாக்க வேண்டாம். நான் எனது திருமண உறவில் இருந்து தான் வெளியேறுகிறேனே தவிர எனது குழந்தைகளை விட்டு பிரிய மாட்டேன். அவர்கள் எனது பெருமை மிக்க அடையாளங்கள். நான் எனது வாழ்க்கையை அவர்களுக்காகத்தான் வாழப்போகிறேன். மேலும் ஒரு தைரியமான பெண் என்றால் நமது நாட்டு சட்டம் வழி காட்டுவதை பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்கள் ( ஆர்த்தி) செய்வது எனது மகன்களை பொது வெளியில் காட்டி, அவர்களை பரிதாபமானவர்களாக காட்டி வருகிறார்கள்.

Actor Ravi Mohan Slams and Share Shocking Informations His Ex Wife Aarti What She Did in Marriage Life

அன்பினால்: நான் எனது முன்னாள் மனைவிக்கு, எனது சம்பாத்தியம், சொத்து , சமூக வலைதளப் பக்கங்கள், எனது வாழ்க்கையின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அனைத்து உரிமைகளை அன்பின் பேரால் நான் கொடுத்திருந்தேன். ஆனால் அவர், எனது அன்பை புரிந்து கொள்ளவில்லை. மாறாக அவர் என்னை பண ரீதியாக பெரும் சிக்கலில் சிக்க வைத்தார். எனது பெற்றோர்களிடம் இருந்து என்னைப் பிரித்தார். எனது தந்தையிடம் என்னால் ஒரு மகன் போல இருக்க முடியாத சூழலை ஏற்படுத்தினார். எனது சம்பாத்தியத்தில் இருந்து எனது பெற்றோர்களுக்கு ஒரு குண்டுமணி அளவிலான பணத்தைக் கூட செலவு செய்ய முடியாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக என்னை நடத்தினார். இப்படியான கொடுமைகளை அனுபவித்த நான் இப்போதும் அமைதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X