திடீர் மாரடைப்பு.. பழம்பெரும் நடிகர் காலமானார்.. ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்!

By

மும்பை: திடீர் மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகர் காலமானதை அடுத்து நடிகர், நடிகைகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறனர்.

தூர்தர்ஷனில் வெளியான மகாபாரதம் தொடரில் திருதராஷ்டிரனாக நடித்தவர் ரவி பட்வர்தன்.

இந்தி, மராத்தி சினிமாக்களில் நடித்து வந்தவர். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அன்பை பெற்றவர்

அன்பை பெற்றவர்

வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இந்தி, மராத்தி ரசிகர்களிடையே அதிக அன்பை பெற்றவர். 80 மற்றும் 90 களில் இந்தியில் பிசியான நடிகராக இருந்தார். இப்போது மராத்தி டிவி சீரியல்களில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக, படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்தார். நிலைமை முழுவதும் சரியான பிறகு நடிப்பை தொடர இருப்பதாகக் கூறி இருந்தார்.

முச்சுத்திணறல்

முச்சுத்திணறல்

பழம்பெரும் நடிகரான இவர், குடும்பத்தினருடன் மகாராஷ்டிர மாநிலம் தானேயில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்குத் திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டடு. இதன் காரணமாக, ரவி பட்வர்தன் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. இது அவர் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இழந்து விட்டோம்

இழந்து விட்டோம்

இதுபற்றி நடிகர் ரவி பட்வர்தனின் மகன் நிரஞ்சன் கூறும்போது, 'எனது தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. எனவே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. அவரை இழந்துவிட்டோம்' என்றார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

மறைந்த பழம்பெரும் நடிகரான ரவி பட்வர்தன், ஏராளமான நாடகங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் பட்வர்தனுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். ரவி பட்வர்தனின் மறைவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X