திடீர் மாரடைப்பு.. பிரபல குணசித்திர நடிகர் ரவி வல்லத்தோல் மரணம்.. நடிகர், நடிகைகள் அதிர்ச்சி!

By

திருவனந்தபுரம்: பிரபல குணசித்திர நடிகர், மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார்.

பிரபல மலையாள நடிகர் ரவி வல்லத்தோல். லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் 1987-ல் வெளியான ஸ்வாதி திருநாள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் இவர்.

அடுத்து காட்பாதர், சர்கம், நாலு பெண்கள், இடுக்கி கோல்ட், சதுரங்கம், ஹிட்லர் பிரதர்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்கன் ட்ரீம்ஸ்

அமெரிக்கன் ட்ரீம்ஸ்

ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒளிபரப்பான முதல் சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அமெரிக்கன் ட்ரீம்ஸ் என்ற சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த சின்னத்திரை நடிகருக்கான கேரள அரசின் விருதைப் பெற்றுள்ளார்.

தொண்டு நிறுவனம்

தொண்டு நிறுவனம்

இவர் மனைவி கீதா லட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள், சிறப்பு குழந்தைகளுக்காக தனல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில வருடங்களாக, சீரியல்களில் நடிக்காமல் திருவனந்தபுரத்தில் உள்ள வலுத்தாகாட் பகுதியில் உள்ள வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.

மாரடைப்பு

மாரடைப்பு

நீரிழிவுக்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக இன்று திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 67. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சக நடிகர், நடிகைகள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான மலையாள திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திறமையான நடிகர்

திறமையான நடிகர்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் சரியாக செய்கிற திறமையான நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். மறைந்த ரவி வல்லத்தோல், சிறந்த எழுத்தாளரும் கூட. சுமார் 25 கதைகள் எழுதியுள்ளார். அதில் இரண்டு டி.வி சீரியல்களாக எடுக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X