பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகன் பாலாஜி மரணம்

Recommended Video

எனக்கே இப்படியா?: கொந்தளித்த ஐஸ்வர்யா ராய் | நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மரணம்!- வீடியோ

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகனான பாலாஜி ரவிச்சந்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இயல்பான நடிப்பாலும், மிரட்டல் வில்லனாகவும் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கோலிவுட்டில் மறக்க முடியாத நடிகராக தடம் பதித்தவர்.

 Actor Ravichandrans son dead

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

இவர்களில் பிசினஸ்மேனான மூத்தமகன் பாலாஜி (50), சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், இன்று சென்னையில் காலமானார்.

இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று மாலை அவரது இல்லத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X