நடிகை அம்பிகாவின் கணவர் நான்? உண்மை இதுதான்.. ரவிகாந்த் பேட்டி!

சென்னை: 80ஸ் காலத்தில் தென்னிந்தியத் திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்தவர் அம்பிகா. இவர், 1981ஆம் ஆண்டு தமிழில் வெளியான அந்த ஏழு நாட்கள் படத்தில் பாவாடை தாவணியில் வந்து நிறைவான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தில், அம்பிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து கமல், ரஜினி,விஜயகாந்த், சத்யராஜ், சிவாஜி கணேஷன் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அம்பிகா, 1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிய அவர், சீரியலில் நடித்து வருகிறார். இதையடுத்து, அம்பிகா,2000 ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தியதாகவும், பிறகு அவருடனும் சண்டை காரணமாக அவரை விட்டு பிரித்து தற்போது மகன்களுடன் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Ambika serial

நடிகர் ரவிகாந்த் பேட்டி: இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரவிகாந்த், பலர் நான் தான் அம்பிகாவின் கணவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நானும் அம்பிகாவும் கிட்டத்தட்ட 16 படங்களில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கணவன் மனைவியாக நடித்து இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தோம். இதனால், ஷூட்டிங்கிற்கு காரில் ஒன்றாகத்தான் போவோம்.

அம்பிகாவின் கணவர்: அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் எங்களை பார்த்ததும், புருஷன் பொண்டாட்டி வந்துட்டாங்கப்பா, ஷாட்டுக்கு போகலாம் என்று ஜாலியாக பேசுவார்கள். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அதுதான் உண்மை என்று நினைத்து கொண்டு இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள். உண்மையில் நான் அவருடைய கணவர் இல்லை. அந்தப் பொண்ணு பாவம், அவங்க பிரேம் குமார் மேனன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அவருக்கு ராம்குமார், ரிஷி குமார் இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். அவங்க நிம்மதியா இருக்கிறாங்க.

Ambika serial

உண்மை இதுதான்: ஆனால் இது பற்றி தெரியாத பலரும் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து ஆன்லைனில் வருவதையோ, சோஷியல் மீடியாவில் வருவதையோ நம்பி ஏமாற வேண்டாம். ஏன் என்றால், நீங்கள் தான் இந்த செய்தி எல்லாம் உண்மை என நினைத்து ஏமாறுகிறீர்கள். தயவு செய்து ஏமாறாதீர்கள் என்று நடிகர் ரவிகாந்த் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X