திருமணமாகி ஏற்கனவே குழந்தை இருக்கு.. ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா குறித்து வெளிவந்த உண்மை!
சென்னை: ரெடின் கிங்ஸ்லி நடிகை சங்கீதாவை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை போன வாரம் திருமணம் செய்து கொண்டார்.
பெங்களுரில் படப்பிடிப்பில் ரெடின் இருந்ததால், அங்கே மிகவும் எளிமையான முறையில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

நடிகை ரெடின் கிங்ஸ்லி: தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அவள் வருவாளா என்ற படத்தில் க்ரூப் டான்ஸ் ஆடினார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்பு இல்லாததால் சொந்த தொழிலை கவனித்து வந்தார். அப்போது, கல்லூரி காலத்து நண்பரான நெல்சன் சிம்புவை இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பாதியில் நின்று போனது.
சினிமாவில் நல்ல பெயர்: இதையடுத்து, மீண்டும் தனது நண்பன் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். அந்த படம் ரெடின்க்கு சினிமாவில் நல்ல பெயரைப்பெற்றுத்தந்தது. அதையடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில், ''வலிச்சா சொல்லப்போது கோமதி'' என்று பேசி ரசிகர்கள் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்டார்.
டாப் நடிகர்களின் படத்தில்: டாக்டர் படத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, ஜெய்லர் படத்திலும், விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் படத்தில் வந்தால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற மைன்ட் செட்டுக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால், பல இயக்குநர்களின் முதல் சாய்சாக ரெடின் இருக்கிறார்.
திடீர் திருமணம்: பல திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி , நீண்ட நாட்களாக காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்ந்து தெரிவித்தனர்.
இரண்டாவது திருமணம்: தற்போது இந்த தம்பதிகள் ஹனிமூனை கொண்டாடி வரும் நிலையில், நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சங்கீதா 2009 கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 45 வயதாகும் நடிகை சங்கீதாவுக்கு ஷிவ்ஹியா என் மகள் இருக்கிறாள் என்று சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











