ரெடின் கிங்ஸ்லிக்கு பொண்ணு பிறந்தாச்சு.. ஒரே பூரிப்பு.. மகளைக் கையில் ஏந்திக் கொண்டு.. செம க்யூட்!
சென்னை: நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் இணைந்து தங்களது சமூக வலைதளப் பதிவுகளிலும் தெரிவித்துள்ளார். இந்த சந்தோஷமாக விஷயத்தைப் பார்த்ததும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த 2023ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியர் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். அப்போது ரசிகர்களும் பிரபலங்களும் என அவர்களை அனைவரும் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். இப்படியான நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இவர்களின் வளைகாப்பு விழா சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளத்திலும் வேகமாக பரவியது.
இந்நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவியும் சின்னத்திரை நடிகையுமான சங்கீதாவும் இணைந்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ரெடின் கிங்ஸ்கி தனது கையில் தனது மகளை வைத்துக் கொண்டு உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள். தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என்பதால் மொத்த குடும்பமும் செம ஹேப்பியாக இருக்கிறார்களாம். இது தொடர்பான விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் தம்பதியர்களை வாழ்த்தியும், தாய் மற்றும் சேய்-இன் நலம் குறித்து விசாரித்தும் வருகிறார்கள்.
அண்மையில் நடைபெற்ற இவர்களது வளைகாப்பு விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். சில வாரங்களுக்கு முன்னர்தான் இவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில், குழந்தை இன்று பிறந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. விவரத்தைக் கேள்விப் பட்டவர்கள் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா தம்பதியருக்கு போன் போட்டு வாழ்த்தி வருகிறார்கள். மேலும் சிலர் இணையத்தில் பொண்ணுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரெடின் கிங்ஸ்லியைப் பொறுத்தவரையில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது வசன உச்சரிப்பு ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்துப் போனதால், இவருக்கு மவுசு ஏறிக் கொண்டே போனது. குறிப்பாக, நெல்சனின் அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட் ஆனார். மேலும் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் கமிட் ஆகி தன்னை காமெடி நடிகராக மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல நிறுவி வருகிறார்.


Click it and Unblock the Notifications









