Richard Rishi - யாஷிகாவுடன் நெருக்கம் காட்டும் அஜித்தின் மைத்துனர் - ஒருவேளை அது கன்ஃபார்மோ?
சென்னை: Richard Rishi (ரிச்சர்ட் ரிஷி) நடிகரும் அஜித்தின் மைத்துனருமான ரிச்சர்ட் ரிஷி நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருவருக்குள்ளும் காதலோ என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியிருக்கிறது.
அஜித்தின் மனைவி ஷாலினி முன்னணி நடிகையாக இருந்தவர். தனது கரியரில் உச்சத்தில் இருக்கும்போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற தம்பியும் இருக்கின்றனர். ஷாமிலி அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் அடைந்தவர். அதேபோல் ஹீரோயினாக வீர சிவாஜி என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துவிட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.

ஹீரோ ரிச்சர்ட்:
ரிச்சர்ட் ரிஷியும் சிறு வயது முதலே நடித்துவந்தாலும் பெரிதாக அவர் அடையாளப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்தில் நடித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ஹிட்டானதோ இல்லையோ சர்ச்சையை சம்பாதித்தது. இதன் காரணமாக அந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்தார் ரிச்சர்ட் ரிஷி. இருப்பினும் மற்ற இயக்குநர்கள் அவரை வைத்து படம் இயக்க முன்வரவில்லை.
ருத்ரதாண்டவம்:
இதனையடுத்து திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரும் விவாதத்தை கிளப்பியது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் தொல்.திருமாவளவனையும் நேரடியாக தாக்கி பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததாக பலர் கூறினர். இந்தப் படமும் படுதோல்வியையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படமும் மோகன் ஜிதான்:
எப்படியாவது முன்னணி இயக்குநர்கள் கதையில் நடித்துவிட வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் ரிச்சர்ட்டுக்கு அந்த வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அவரது அடுத்த படத்தையும் ரிச்சர்ட்டின் ஆஸ்தான இயக்குநரான மோகன் ஜியே இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் மோகன் ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

யாஷிகாவுடன் காதல்:
இந்நிலையில் ரிச்சர்ட் ரிஷி நடிகை யாஷிகா ஆனந்த்தை காதலித்துவருவதாக கூறப்பட்டது. இந்தப் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் தனக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். அதனையடுத்து இருவரும் நார்மலாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார். இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் ரிஷியும், யாஷிகா ஆனந்த்தும் காதலித்துவருவது உண்மைதான்போல என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா ஆன்ந்த்:
யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது தோழியுடன் சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அடைந்த படுகாயத்துக்கு பல மாதங்கள் சிகிச்சை எடுத்து அண்மையில் நலம் பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. அவருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் சோஷியல் மீடியாவில் அவர் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











