அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ரிச்சர்ட் கூடதான்.. திரௌபதி இயக்குநர் அதிரடி அறிவிப்பு!

சென்னை: தனது அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன்தான் என தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் மோகன்ஜி.

வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி அண்மையில் இயக்கி வெளியான படம் திரௌபதி. நாடகக் காதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழகம் முழுக்க 330 திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸானது. இந்த படத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும் ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்தது.

ரிச்சர்ட்டின் நடிப்பு

ரிச்சர்ட்டின் நடிப்பு

இந்தப் படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். திரௌபதி படத்தில் சிலம்பம் பயிற்சியாளராக அவர் நடித்திருந்தார். இதற்கு முன்பு பல படங்களில் அவர் நடித்திருந்த போதும் இந்தப் படத்தில் தான் ரிச்சர்ட் ரிஷியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவரது கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

வசூல் குவிப்பு

வசூல் குவிப்பு

பெரும் தடைகளை தாண்டி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. திரௌபதி முதல் நாளிலேயே நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்தது திரௌபதி படம். இதனால் அடுத்தடுத்த நாட்களில் படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியான முதல் 10 நாட்களில் 15 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது.

கடவுளின் பெயர்

கடவுளின் பெயர்

50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் கோடி கணக்கில் வசூலை குவித்ததை பார்த்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் வாய் பிளந்தது. இந்நிலையில் தான் இயக்கவுள்ள அடுத்தப் படத்தின் பெயரும் ஒரு கடவுளின் பெயராக தான் இருக்கும் என அண்மையில் அறிவித்தார் இயக்குநர் மோகன். அதோடு இதே கூட்டணிதான் அடுத்த படத்தில் இணையும் என்றும் டிவிட்டியிருந்தார்.

விரைவில் அறிவிப்பு

இந்நிலையில் தனது அடுத்தப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷிதான் நாயகன் என்று கூறியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தன்னுடைய அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன்தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் டைட்டில் ஒரு நல்ல நாளில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் மோகன்ஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X