அப்படித்தான் நல்லா தேய்க்கணும்.. தீயா வேலை செய்யும் ரியோ ராஜ்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை : நடிகர் மற்றும் தொகுப்பாளரான ரியோராஜ் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வீடியோவை டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Quarantine Cleaning Challenge | Rio Raj | Pandian Stores Kathir | Lock Down

கொரோனாவால் பலரும் வீட்டில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். நடிகர் ரியோ ராஜ் வீட்டில் தன் மனைவிக்கு காய்கறி வெட்டி கொடுப்பது ,சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதை ரசிகர்களுக்கு நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்பதால் டிக்டாக் வீடியோவாக பகிர்ந்துள்ளார் ரியோ.

Actor Rio Raj has been released tiktok video

இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் வின்னர் படத்தில் பாத்திரங்களை தேய்த்துக்கொண்டு வடிவேலு பேசும் வசனத்தை பேசி டிக்டாக் செய்திருக்கிறார். அதே போல மற்றொரு காணொளியில் காய்கறிகளை வெட்டி கொடுப்பது மற்றும் பழங்களை வெட்டி கொடுப்பது என்று தீயாய் வீட்டில் வேலை செய்து வருவதை போல டிக்டாக் செய்து டிரெண்டாகி வருகிறார் . இப்போது இவர் செய்யும் வீடியோக்களுக்கு ஏற்றவாறு ரியோராஜும் தனது டிக்டாக் பக்கத்தில் ஃபேமிலி மேன் என்றே பதிவிட்டிருக்கிறார் .

Actor Rio Raj has been released tiktok video

சூரி போன்ற முக்கிய பிரபலங்களே தங்களின் குடும்பத்துடன் வீட்டில் செய்யும் அட்டகாசங்களை எடுத்து வீடியோ பதிவாக இணையத்தில் வெளியிட ஆரம்பித்து விட்டனர். சமீபத்தில் சூரி போட்ட இரண்டு வீடியோக்களும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது . இதை போல பல பிரபலங்களும் தங்கள் குழந்தைகளுடன் அடுத்தடுத்து வீடியோக்களை எடுத்து வருவதாகவும் அதை பதிவிட்டு அசத்த போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Rio Raj has been released tiktok video

தொகுப்பாளராக இருந்த ரியோ சரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு படங்களில் நடிக்க துவங்கினார் . இதில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நாயகனாக ஒப்பந்தமாகி வருகிறார் ரியோ.

Actor Rio Raj has been released tiktok video

ரியோராஜ் தற்போது ரம்யா நம்பீசனுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது குறிப்பிடதக்கது . இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பால சரவணன்,ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், சித்தார்த் விபின் ,எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சந்தான பாரதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X