Rio Raj: மீண்டும் இணைந்த 'ஜோ' பட கூட்டணி.. 2 மாதங்களில் சூட்டிங்கை முடித்து அசத்தல்

சென்னை: ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கி தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன், ரெடி ஸ்டெடி கோ உள்ளிட்ட சீரியல்கள், நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை சொந்தமாக்கிக் கொண்டவர் ரியோ ராஜ். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வரவேற்பை பெற்ற பெரிய ராஜ், சினிமாவில் சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஜோ படம் அவருக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் ரியோவுடன் இணைந்து மாளவிகா மனோஜ் நடித்திருந்தார். இந்நிலையில் இதே கூட்டணி அடுத்ததாக மற்றொரு படத்திலும் நடித்து முடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Rio raj

நடிகர் ரியோ ராஜ்: ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கிய ரியோ ராஜ் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறினார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்க துவங்கிய ரியோ ராஜ் நடிப்பில் சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ரியோ ராஜ், மாளவிகா மனோஜுடன் இணைந்து நடித்திருந்த ஜோடி படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும வெற்றியையும் கொடுத்துள்ளது.

மீண்டும் இணைந்த ஜோ கூட்டணி: இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் இதே ஜோடி இணைந்து புதிய படத்தில் நடித்து முடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிளாக்ஷிப் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரொமான்ஸ் ஜானரில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் சரியான திட்டமிடலுடன் இரண்டு மாதங்களிலேயே இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக் கொள்ளும்படியான கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சூட்டிங் நிறைவு: டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் கூட்டணியில் வெளியான ஜோ படம் ரியோவிற்கு மிகச் சிறப்பாக கை கொடுத்தது. இந்நிலையில் அதே காம்பினேஷனில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விரைவில் ஃபர்ஸ்ட் லுக்: படத்தின் தலைப்பையும் வெளியிடாமலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக ஒரு வெற்றிக்காக போராடி வந்த ரியோ ராஜிற்கு ஜோ படம் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்த நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படமும் சிறப்பான வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X