Rio Raj: ஆண்பாவம் பொல்லாதது.. ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜின் பட டைட்டில் & பர்ஸ்ட் லுக்!

சென்னை: டிவி சேனல்களில் ஆங்கராக இருந்த ரியோ ராஜ் இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டில் தமிழில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதையடுத்து கடந்த ஆண்டில் ரியோ ராஜ் நடித்திருந்த ஜோ படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகிவரும் ஸ்வீட் ஹார்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்கும் மற்றொரு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

Rio Raj Malavika manoj Aanpaavam pollathathu movie

நடிகர் ரியோ ராஜ்: டிவி சேனல்களில் பிரபல ஆங்கராக வலம்வந்தவர் ரியோ ராஜ். இவர் கடந்த 2019ம் ஆண்டில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைய தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும் படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படங்களை முறியடிக்கும்வகையில் கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான ஜோ படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் ரியோ ராஜிற்கு பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் ரியோ மற்றும் மாளவிகா மனோஜின் ஜோடி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது.

மீண்டும் இணைந்த ஜோ பட ஜோடி: இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த சமூகத்தில் ஆண்கள் படும் துன்பத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக இயக்குநர் கலையரசன் தெரிவித்துள்ளார். இதையொட்டியே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காணப்படுகிறது. ரியோ ராஜ் மண்டைக்குள் புகுந்து பெண்கள் அவரை கடுப்பேற்றுவதாக இந்தப் போஸ்டரில காணப்படுகிறது. மேலும் படத்திற்கு ஆண் பாவம் பொல்லாதது என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Rio Raj Malavika manoj Aanpaavam pollathathu movie

டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீஸ்: இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர். முற்றிலும் இளைஞர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்க கமிட்டாகியுள்ளனர். அந்த வகையில் படத்தில் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளராக சித்துகுமார், எடிட்டராக வருண் கேஜி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்நிறுவனம் முன்னதாக ஹரி, முத்தையா உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து படங்களை தயாரித்துள்ளது.

ஆண் பாவம் பொல்லாதது: ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் சிறப்பான ஜோடியாக பார்க்கப்படுகின்றனர். கடந்த 2023ம் ஆண்டில் இவர்களின் காம்பினேஷனில் வெளியான ஜோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஜோடியும் சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் மீண்டும் ஆண் பாவம் பொல்லாதது என்ற இந்தப் படத்தில் இணைந்துள்ளது மிகச்சிறப்பான எதிர்பார்ப்பை படத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ஸ்வீட் ஹார்ட் மற்றும் நிறம் மாறும் உலகில் படங்களில் நடித்துள்ளார் ரியோ ராஜ். இதில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X