Kantara: நவம்பர் 27ம் தேதி வெளியாகும் காந்தாரா 2 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. இன்னொரு சிறப்பும் இருக்கு

பெங்களூர்: நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

Actor Rishab shettys Kantara movie first look poster to be released on 27th of this month

மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம்: நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஹம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 16 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படம் 400 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

காந்தாரா -சாப்டர் ஒன் படம்: இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் முன்கதையை தான் இரண்டாவது பாகமாக ரிஷப் ஷெட்டி உருவாக்கவுள்ளதாகவும் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு அவர் கதைக்களத்தை உருவாக்கியதால்தான் படத்தின் சூட்டிங் தாமதமானதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க்கை ரிஷப் ஷெட்டி முடித்துள்ள நிலையில் வரும் 27ம் தேதி படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கவுள்ளது. இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனமான ஹம்பாலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா சாப்டர் 1 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் அத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வெளிச்சமல்ல.. தரிசனம்: மேலும் இது வெளிச்சமல்ல, தரிசனம் என்றும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் காந்தாரா படத்தை போலவே பான் இந்தியா படமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போல இல்லாமல் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்: கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் பூர்வக்குடி மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையில் நடக்கும் போட்டியை மையமாக கொண்டு வெளியானது. ஆண்டாண்டு காலங்களாக நடந்துவரும் நில உரிமை குறித்த பிரச்சினையை கதைக்களமாக கொண்டு மிகவும் எளிமையான திரைக்கதையாக மக்களுக்கு கொடுத்திருந்தார் ரிஷப் ஷெட்டி. மிகவும் சைலண்டாக வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அதிர்வலைகளை சினிமாவில் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள காந்தாரா படத்தின் அடுத்த பாகம் ரசிகர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X