ரிஷி கபூரின் உடல் மும்பையில் தகனம்.. அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் உடல் மும்பை சந்தன்வாடி பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். நேற்று உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை ரிஷி கபூர் திடீர் மரணமடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவலை அவரது நீண்ட கால நண்பரும் சமகால நடிகருமான அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

மோடி இரங்கல்

மோடி இரங்கல்

ரிஷி கபூர் மரணமடைந்த செய்தியை அவரது குடும்பத்தாரும் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரிசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

போலீஸ் கோரிக்கை

போலீஸ் கோரிக்கை

இதேபோல் பாலிவுட் பிரபலங்கள், நடிகர் ரஜினிக்காந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் ரிஷி கபூரின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மயானத்திற்கு கொண்டு செல்லும் படி கோரிக்கை விடுத்தனர்.

பலர் பங்கேற்பு

பலர் பங்கேற்பு

இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரைன் லேக்ஸ் சந்தன்வாடி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மயானத்திலேயே ரிஷி கபூரின் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. அவரது இறுதிச்சடங்கில் அவரது மனைவி நீத்து கபூர், மகன் ரன்பீர் கபூர் மற்றும் ரிஷி கபூரின் உறவினர்களான ரந்தீர் கபூர், ராஜீவ் கபூர், கரீனா கபூர், சைய்ஃப் அலிக்கான, அனிஷா ஜெய்ன், மனோஜ் ஜெய்ன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாஸ்க் அணிந்து

மாஸ்க் அணிந்து

இதேபோல் அனில் அம்பானி, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். லாக்டவுன் காரணமாக 20 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். ரிஷி கபூரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X