24 மணி நேரத்தில் 2வது ஷாக்.. பிரபல நடிகர் ரிஷி கபூர் காலமானார்.. பெரும் சோகத்தில் பாலிவுட்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 67.
Recommended Video
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்றார்.
2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் நாடு திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதி
இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

அமிதாப் தகவல்
இநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரிஷி கபூர் மரணமடைந்த தகவலை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் சென்று விட்டார்.. ரிஷி கபூர் போய்விட்டார்.. இறந்துவிட்டார்.. நான் உடைந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள்
ரிஷி கபூரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரிஷி கபூர் நியூயார்க் மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்ற போது பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரித்தனர்.

அடிக்கடி செக் அப்
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மும்பை மிரர் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார் ரிஷி கபூர். அப்போது, "புற்றுநோயில் இருந்து குணமடையலாம் என நான் இப்போது அனைவருக்கும் உறுதியளிக்கிறேன், நான் வீடு திரும்புவதற்கு இன்னும் சில வாரங்கள் தேவை. வருடத்திற்கு ஒரு முறை நான் செக் அப்க்கு வர வேண்டும். என கூறியிருந்தார்.

விருதுகள்
ரிஷி கபூர் 1970 மற்றும் 80-களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தார். அமர் அக்பர் அந்தோனி, பாபி, மற்ற்ம சாந்தி உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது. பிலிம் பேர் விருதுகள், தேசிய விருதுகள் என குவித்துள்ளர் ரிஷி கபூர்.

ரன்பீர் கபூர்
ரிஷி கபூர் 1980ஆம் ஆண்டு சக நடிகையபான நீத்து சிங்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ரித்திமா கபூர் என்ற மகளும் ரன்பீர் கபூர் என்ற மகனும் உள்ளனர். ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

பாலிவுட் சோகம்
நேற்று முன்னணி நடிகரான இர்ஃபான் கான் அகால மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு புகழ்பெற்ற நடிகர் மரணமடைந்திருப்பது பாலிவுட் நட்சத்திரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











