அந்த பெண் யாரென்றே எனக்கு தெரியாது.. பாலியல் குற்றச்சாட்டை மறுத்த ரியாஸ் கான்!
சென்னை: நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்து இருக்கும் நிலையில், ரியாஸ் கான் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அந்த பெண் யாரே என்றே எனக்கு தெரியாது, என்ன சொல்ற எப்போ சொல்லுறாள் என்று எனக்கு தெரியவில்லை என நடிகர் ரியாஸ் கான் தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி புயலை கிளப்பி இருக்கும் நிலையில் நடிகை, ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அதில், தான் பிளஸ் டூ முடித்த நேரத்தில் தன்னை அணுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அப்போது பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இந்த புகார்களைத் தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகியுள்ளார். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா தலைவர் மோகன்லாலுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

நடிகர் ரியாஸ் கான்: இதைத்தொடர்ந்து, நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறினார். அதில், ஒரு புகைப்படக் கலைஞர் என் அனுமதி இல்லால் ரியாஸ் கானிடம் என் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து, எனக்கு இரவு ரியாஸ் கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர், பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டதாகவும், வெளிப்படையான கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி தகாத உறவிற்கு அழைத்ததாக கூறியிருந்தார்.
மறுப்பு: இந்த குற்றச்சாட்டை மறுத்த ரியாஸ் கான், அந்த பெண் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இது எப்போது நடந்தது, எங்கு நடந்தது என்ற எந்த விவரமும் தெரியாமல் நானாக இதற்கு பதில் அளிக்க முடியாது. நான் சினிமாவில் 36 வருஷமாக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து இருக்கிறேன். இதுவரை யாரும் என்பது இதுபோன்ற எந்த ஒரு புகாரையும் கூறியது இல்லை.
விளக்கம் கொடுப்பேன்: அந்த பெண் போனில் பேசினார் என்று சொல்கிறார். அது நான் தான் என்று எப்படி அந்த பெண்ணுக்கு தெரியும். நான் வீடியோ காலில் பேசி இருந்தால், அது நான் என்று சொல்லலாம். குடும்பத்தினர் மட்டுமில்லாமல், சினிமாவைச் சேர்ந்த அனைவருக்கும், என்னை பற்றி நன்றாகத் தெரியும். ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டு குறித்து நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. விசாரணைக்கு குழு விசாரணைக்கு என்னை அழைத்தால் நிச்சயம் விளக்கம் கொடுப்பேன் என்று ரியாஸ் கான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











