கட்டழகு காளை போல உடல்..ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் ரியாஸ்கான்!

சென்னை : வில்லன் நடிகராக பலருக்கும் பரிச்சயமான நடிகர் ரியாஸ்கான் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தின் மூலம் இவர் பரிச்சயமான நிலையில் அதைத் தொடர்ந்து வின்னர் திரைப்படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ரியாஸ்கான் இப்பொழுது பழனி படிக்கட்டு போல இருக்கும் தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்துள்ளார்.

எண்ணற்ற மொழிகளில்

எண்ணற்ற மொழிகளில்

சினிமாவில் ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல் வில்லன்களுக்கும் ரசிகர் கூட்டம் இன்று வரை இருந்து வரும் நிலையில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி என எண்ணற்ற மொழிகளில் நடித்துள்ள ரியாஸ்கான் மிகவும் பிரபலமாக உள்ளவர்.

பத்ரி

பத்ரி

பெரும்பான்மையான திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவும் வில்லனாகவும் சில திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் வந்துள்ள ரியாஸ்கான் தமிழ் ரசிகர்களுக்கு பத்ரி திரைப்படத்தின் மூலம் பரிச்சயமானவர்.

"கட்டதுரை" கதாபாத்திரம்

விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரியாஸ்கான் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் திரைப்படத்தில் நடித்ததன் பின் அனைவராலும் ரசிக்கப்படும் நட்சத்திரமாக மாறியதையடுத்து அதில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் வடிவேலுடன் இணைந்து காமெடியிலும் கலக்கிய இவரின் "கட்டதுரை" கதாபாத்திரம் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது.

கட்டுடல் மேனியை

கட்டுடல் மேனியை

உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்திவரும் ரியாஸ்கான் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதை மிக முக்கியமான செயலாக கொண்டிருக்கும் நிலையில் இவர் தனது கட்டுடல் மேனியை காட்டிக் கொண்டு இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

வாய்பிளக்க வைத்துள்ளது

வாய்பிளக்க வைத்துள்ளது

முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக்குடன், பழனி படிக்கட்டு போல இருக்கும் கட்டுக்கோப்பான உடலை காட்டிக்கொண்டு ரியாஸ்கான் எடுத்துள்ள இந்த புகைப்படம் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X