திலீப்பிற்கு முத்தம்.. வாண்டடாக வந்து மாட்டிய ரியாஸ் கான்.. வெளுக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: மலையாள நடிகை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் 'பா பா பா' என்ற படத்தில் ரியாஸ் கான் நடித்துள்ளார். இந்த படம் 18ந் தேதி வரவேற்பை பெற்றதை அடுத்து நடிகர் ரியாஸ் கான் தீலிப்பை சந்தித்து முத்தம் கொடுத்து வாழ்த்தி உள்ளார்.

பிரபல மலையாள நடிகையை ஓடும் காரில் கடத்தி அவரை வன்கொடுமை செய்து, தாக்கி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஆறு பேரை தண்டித்தது. ஆனால், இந்த குற்றத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட திலீப், போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இருந்து திலீப் விடுவிக்கப்பட்ட உடன் அவர் நடித்திருந்த 'பா பா பா' படம் தியேட்டரில் வெளியானது. அந்த படத்தில் மோகன் லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

Dileep Riyaz Khan kiss

மலையாள நடிகர் திலீப்: இது பெரும் விவபத்தை ஏற்படுத்திய நிலையில்,மலையாள டப்பிங் கலைஞரும், நடிகையும் சமூக ஆர்வலருமான பாக்யலட்சுமி, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பேசினார். அப்போது, தீர்ப்பு வெளியானதும் 'பா பா பா' படத்தின் போஸ்டரை மோகன்லால் வெளியிட்டு இருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருடன் நிற்பது உணர்ச்சியற்ற, சிந்தனையற்ற செயல், மோகன்லாலின் இம்முடிவு தவறான முன்னுதாரணம். மோகன்லால் ஒரு கணம் கூட யோசிக்கவில்லையா? என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

சர்ச்சையில் சிக்கிய ரியாஸ் கான்: அதே போன்ற ஒரு செயலை ரியாஷ் கான் செய்து பலரையும் கோவமடைய செய்துள்ளார். அதாவது திலீப் குமார் நடித்த 'பா பா பா' படத்தில் ரியாஷ் கான் நடித்துள்ளார். இந்த படம் 18ந் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதையடுத்து, அவரை நேரில் சந்தித்தர நடிகர் ரியாஸ் கான், தீலிப்புக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதற்கான அவர் நிரபராதி ஆகிவிட முடியாது என்றும் அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தா என்று கருத்துக்களை பகிர்ந்து ரியாஸ் கானை திட்டி வருகின்றனர்.

நடிகை கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கில், திலீப் நிரபராதி, அவர் மீதான குற்றச்சாட்டுகளை தான் நம்பவில்லை, திரையுலகில் நான் அறிமுகமாகியதில் இருந்து அவர் என் நீண்ட கால நண்பர் அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவர் தவறு செய்யக்கூடியவர் அல்ல என்று ரியாஸ் கான் ஆணித்தரமாக பல ஊடகங்களில் இந்த வழக்க தொடரப்பட்ட கால கட்டத்தில் இருந்தே பேசி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X