RJ Balaji: ஆர்ஜே டூ நடிகர்.. தயாரிப்பாளர்.. இயக்குநர்.. பன்முகத்திறமை காட்டும் ஆர்ஜே பாலாஜி!
சென்னை: பிரபல ரேடியோ சேனலில் ஆர்ஜேவாக இருந்து தன்னுடைய வாய்ப்பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி.
அவரது பேச்சு அவருக்கு தனியான அடையாளத்தை கொடுத்த நிலையில், இதன்மூலம் சினிமாவில் துணை கேரக்டர்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
தன்னுடைய பேச்சால் அனைத்து விஷயங்களையும் காமெடியாக கேள்விக்குட்படுத்தும் விஷயத்தை அவர் சிறப்பாக கையாண்டு வருகிறார்.

ஆர்ஜே பாலாஜி பிறந்தநாள்: பிரபல ரேடியா சேனலில் ஆர்ஜேவாக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. எந்த விஷயத்தையும் கேலிக்குட்படுத்தும் கேள்விக்குட்படுத்தும் இவரது பேச்சு இவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. பல படங்களில் இவர் துணை கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து எல்கேஜி என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக தனது என்ட்ரியை கொடுத்தார்.
நடிகர், ரேடியோ ஜாக்கி, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. இவரது அடுத்தடுத்த படங்கள், அரசியல் மிக்சிங்கில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் வர்ணணையாளராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. தற்போது படங்களில் நடித்து வருவதால், இதை இவர் அதிகமாக செய்வதில்லை. தான் கையில் எடுக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை மற்றவர்களை கவரும் வகையில் செய்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி.
எதிர்நீச்சல், தீயா வேலை செய்யனும் குமாரு, வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி போன்ற படங்களில் இவர் துணை கேரக்டர்களில் நடித்துள்ளார். இவரது முதல் படமே இவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. அரசியல் நையாண்டியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்திருந்தார். நாயகனாக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்ஜே பாலாஜி.
தன்னுடைய இரண்டாவது படத்திலேயே நடிகை நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்திலும் கார்ப்பரேட் சாமியார்களை கேள்விக்குட்படுத்தியிருந்தார். அடுத்ததாக, பாலிவுட்டில் வெளியான பதாய் ஹோ என்ற சூப்பர் ஹிட் படத்தை தமிழில் வீட்ல விஷேசம் என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
தற்போது கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷிவானி நாராயணன் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜியின் தேர்ந்தெடுத்த கதைகள் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்து வருகிறது. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் பாலாஜி. அவரது காமெடி கலந்த ஹீரோயிசம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவரது தொடர் முயற்சிகள் தொடர்ந்து அவருக்கு சிறப்பாக அமைய அவரது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களை கூறுவோம்.


Click it and Unblock the Notifications











