Singapore Saloon movie :இயக்குநருடன் ஆர்ஜே பாலாஜி சண்டை.. ட்ராப் அவுட் ஆனதா சிங்கப்பூர் சலூன்?
சென்னை : நடிகர் ஆர்ஜே பாலாஜி ஆர்ஜே, நடிகர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.
இவரது எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் ஆகிய படங்கள் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், மிகவும் பிசியான நடிகராக மாறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.
இயக்குநருடன் ஆர்ஜே பாலாஜி சண்டை :நடிகர், ஆர்ஜே, விஜே, இயக்குநர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமையுடன் நடைபோட்டு வருகிறார் ஆர்ஜே பாலாஜி. இவரது எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் ஆகிய படங்கள் இவருக்கு சறிப்பாக கைக்கொடுத்துள்ளது. இதையடுத்து தற்போது இயக்குநர் கோகுல் டைரக்ஷனில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தப் படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருவது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களின் மூலம் தெரியவருகிறது. படத்தின் இயக்குநர் கோகுல் முன்னதாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். சிங்கப்பூர் சலூன் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த தயாரிப்பாளர் அதிகமான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இருவரும் இறங்கிவராத நிலையில், கோபமடைந்த தயாரிப்பாளர், படத்தின் சூட்டிங்கை நிறுத்த முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தங்களது கோபத்தை விட்டு ஆர்ஜே பாலாஜி மற்றும் கோகுல் இருவரும் இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ஜே பாலாஜி -கோகுல் இருவருமே காமெடி களத்தில் சிறப்பான படங்களை கொடுத்துள்ள நிலையில், இந்தக்கூட்டணி இணைந்து சிங்கப்பூர் சலூன் என்ற பெயரை படத்தை அறிவித்ததும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் கருத்து மோதல் காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் தடைபட்டது குறித்த தகவல்கள் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

முன்னதாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான ரன் பேபி ரன் படம் த்ரில்லர் ஜானரில் வெளியானது. ஆனாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில், சிங்கப்பூர் சலூன் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கருத்து சொல்வதாக இருந்தாலும் எல்கேஜி போன்று காமெடியுடன் சொல்வதையே ரசிகர்கள் அதிகமாக விரும்புகின்றனர். அதனால்தான் த்ரில்லர் வகை படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications











