RJ Balaji: மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. நடிக்க மறுத்தாரா நயன்தாரா?
சென்னை: நடிகர். இயக்குனர் என பன்முக திறமையுடன் கோலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. தொடர்ந்து படங்களை இயக்கவும் நடிக்கவும் செய்து வந்த ஆர்ஜே பாலாஜி கடந்த சில வாரங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ரசிகர்களை கவர்ந்து வந்தார். கிரிக்கெட் வர்ணனையாளராக ஆர்ஜே பாலாஜிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படும் சூழலில் இவர் தொடர்ந்து அதில் பிஸியாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஆர்ஜே பாலாஜி தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆர்ஜே பாலாஜி: ரேடியோ ஜாக்கியாக பல நிகழ்ச்சிகளை சிறப்பான வகையில் ரசிகர்களை கவரும் வண்ணம் கொடுத்தவர் ஆர் ஜே பாலாஜி. ஒரு கட்டத்தில் காமெடியனாக இவர் சினிமாவில் நடிக்க தொடங்கி தொடர்ந்து படங்களை நடித்து இயக்கவும் செய்தார். அந்த வகையில் இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான எல்கேஜி படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. அரசியலை காமெடியாக சொன்ன இந்த படத்தின் திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஆர்ஜே பாலாஜி. படத்தில் பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்: எல்கேஜி படத்தை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் தன்னை இணைத்துக் கொண்டார் ஆர்ஜே பாலாஜி. இதில் குறிப்பாக மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆன்மீகத்தையும் நேர்த்தியான கதைக்களத்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கொடுக்க முடியும் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்திருந்தார். படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். மேலும் ஊர்வசி உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு துணையாக இருந்தனர்.
நயன்தாராவிற்கு பதில் திரிஷா: இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்க தற்போது தயாராகி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தை வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்காக அவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் டைட்டில் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா அம்மனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை திரிஷா: முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவை கேரக்டரில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் திரிஷா. தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் என தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வரும் திரிஷா, பாலிவுட்டிலும் சல்மான்கான் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஆர்வம்: இந்நிலையில் நயன்தாராவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில் திரிஷா இணையவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்தப் படத்தில் திரிஷாவிற்கு எந்த மாதிரியான கேரக்டர் அமையும் என்பது குறித்தும் படத்தின் கதைக்களம் ரசிகர்களை எந்தவிதத்தில் கவரும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











