RJ Balaji: தளபதி 69 படத்திற்காக விஜய்யிடம் கதைசொன்ன ஆர்ஜே பாலாஜி.. எதனால நடக்கல தெரியுமா?
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆர்ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத் திறமை கொண்ட ஆர்ஜே பாலாஜி நடிப்பில் அடுத்ததாக சொர்க்கவாசல் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் பேசி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. தன்னுடைய கேரியரில் நடந்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய நடிப்பில், இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து வருகிறார். நடிகர் விஜய்க்கு தான் இருமுறை இயக்குநராக கதை சொன்னதாகவும் அவருக்கு அந்தக் கதைகள் பிடித்திருந்ததாகவும் ஆர்ஜே பாலாஜி குறிப்பிட்டுள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படங்கள் நடக்காமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் ஆர்ஜே பாலாஜி: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆர்ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர், விஜே என அடுத்தடுத்த பல தளங்களில் தன்னை வெளிப்படுத்திவரும் நடிகர் ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி படத்தின்மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற படங்களும் இவருக்கு சிறப்பாக அமைந்தன. அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சொர்க்கவாசல் படம் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அடுத்ததாக சூர்யா 45 படத்தையும் இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சொர்க்கவாசல் படம்: இதனிடையே சொர்க்கவாசல் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஆர்ஜே பாலாஜி ஈடுபட்டு வருகிறார். அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். சூர்யா 45 படத்தின் கதையை கேட்ட ஒரே மணிநேரத்தில் படத்தை சூர்யா ஓகே செய்ததாக கூறியுள்ளார். இதனிடையே அவரது கேரியரில் சிறப்பாக அமைந்த நானும் ரவுடிதான் படத்தை முன்னதாக தான் ஏற்கவில்லை என்றும் அப்போது தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் பிசியாக இருந்ததாகவும் விக்னேஷ் சிவனிடம் அவரது படத்தில் நடிக்க முடீயாது என்று மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்தக் கேரக்டரில் அனிருத் உள்ளிட்ட பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டு ஒருகட்டத்தில் தானே நடித்ததாகவும் கூறியுள்ளார்.
நயன்தாராவுடனான நட்பு: இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவுன் பழகுவது குறித்து தனக்கு தயக்கம் இருந்த நிலையில், அவர் சகஜமாக பழகியதாகவும், தங்களது நட்பு மூக்குத்தி அம்மன் படம்வரை நீடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் கதைக்களத்தில் சில மாறுபட்ட அபிப்ராயங்கள் ஏற்பட்ட போதிலும் தங்களது நட்பை அது பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, சூர்யாவிற்கு கதை சொல்வதற்கு முன்னதாக ஏஆர் ரஹ்மானை அணுகி அவரது கால்ஷீட்டை பெற முயன்றதாகவும் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். முதலில் தயங்கினாலும் பின்பு அவர் ஓகே சொன்னதையும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு கதை சொன்ன ஆர்ஜே பாலாஜி: இதனிடையே நடிகர் விஜய்க்கு தான் இருமுறை கதை சொன்னதாகவும் கடந்த 2021ம் ஆண்டிலேயே அவரிடம் கதை சொல்லி அவரை இம்ப்ரஸ் செய்த நிலையில், அவர் ஒரு மாதத்திற்குள் எப்படி திரைக்கதையை முடிவு செய்வீர்கள் என்று கேட்டதாகவும், தான் தன்னுடைய கதையையே 8 மாதங்கள் எழுதுவேன் என்பதால் விஜய் கதையை எப்படி அவ்வள சீக்கிரத்தில் எழுத முடியும் என்பதால் அதை ஏற்கவில்லை என்றும் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். இதனிடையே, இந்த ஆண்டில் தளபதி 69 படத்திற்காகவும் கதை சொல்லி விஜய்யை இம்ப்ரஸ் செய்ததாகவும் ஆனால் விஜய்யின் கடைசிப்படம் என்பது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த முறையும் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











