ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. படத்தோட பேரு என்னன்னு தெரியுமா?

சென்னை : ஆர்ஜே, விஜே, கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத் திறமையை கொண்டுள்ள ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படம் மூலம் தன்னை ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்.

தொடர்ந்து அடுத்தப்படத்திலேயே நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

அடுத்தடுத்து வீட்ல விஷேசம், ரன் பேபி ரன் என வித்தியாசமான தளங்களில் படங்களை கொடுத்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற படம் ரிலீசாகவுள்ளது.

நடிகர் ஆர்ஜே பாலாஜி

நடிகர் ஆர்ஜே பாலாஜி

எல்கேஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆர்ஜே பாலாஜி. முன்னதாக ஆர்ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றிவந்த ஆர்ஜே பாலாஜி இந்தப் படத்தில் அரசியலை காமெடியாக கொடுத்து சக்சஸ் பெற்றிருந்தார். படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் இணைந்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் வெற்றிப் படைப்புகளாக கொடுத்துள்ளார்.

நயன்தாராவுடன் நடித்த மூக்குத்தி அம்மன்

நயன்தாராவுடன் நடித்த மூக்குத்தி அம்மன்

நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன், ஊர்வசி உள்ளிட்டவர்களுடன் இணைந்து வீட்ல விஷேசம், சமீபத்தில் வெளியான த்ரில்லர் படமான ரன் பேபி ரன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்து அதிரடி கிளப்பி வருகிறார். தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் இந்த படத்தில் ரசிகர்களை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் ஆர்ஜே பாலாஜி தன்னுடைய சமீபத்திய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆர்ஜே பாலாஜி

நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆர்ஜே பாலாஜி

தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு தன்னை நெகிழ்ச்சியடைய வைப்பதாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். ரன் பேபி ரன் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்த நிலையில், தன்னுடைய முந்தைய படங்களுக்கும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு தன்னை பெதுருமையாக உணர வைப்பதாகவும் தெரிவித்திருந்தார். அடுத்ததாக ரிலீசாக உள்ள அவரது சிங்கப்பூர் சலூன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், விரைவில் இந்தப் படத்தின் அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் படம்

ஆர்ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் படம்

இந்நிலையில் அறிமுக இயக்குநர் டைரக்ஷனில் தற்போது இணைந்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படத்திற்கு தற்போது சொர்க்கவாசல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் டைரக்ட் செய்துவரும் நிலையில், ஷிமோகாவில் இதன் சூட்டிங் 37 நாட்கள் நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்த செல்வராகவன்

ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்த செல்வராகவன்

இதனிடையே இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் பிரபல இயக்குநர் செல்வராகவன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ஆனால் செல்வராகவனுக்கு இந்தப் படத்தில் வில்லன் ரோல் இல்லையாம். படத்தின் முக்கியமான கேரக்டரில் செல்வராகவன் நடிக்கவுள்ளதாகவும் படத்தில் யோகிபாபு, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருவதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X