"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்!
Recommended Video
சென்னை: நடிகர் வடிவேலு மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு வசம் தற்போது படங்கள் எதுவும் இல்லை. அஜித் நடிக்கும் புதிய படம் மற்றும் கமலின் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களில் அவர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நானும் நீயும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடிப்பதற்காக , வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட வடிவேலு, படப்பிடிப்பு வர மறுப்பதாகவும், படத்தின் கதையை மாற்ற வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் புகாரில் ஆர்.கே குறிப்பிட்டுள்ளார். தனது பணத்தை திரும்ப தரவில்லை என்றால், வடிவேலு நடிக்கும் புதிய படங்களை வெளியிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 24ம் புலிகேசி படப் பிரச்சினையால் இரண்டு ஆண்டுகளாக வடிவேலுவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. இப்போது தான் அந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிந்தது. இந்த நிலையில் ஆர்.கே.வின் இந்த புகாரால் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











