RK Suresh: ஒப்பந்தம் சைன் பண்ணியிருக்கீங்க.. சரியா பாருங்க.. யுவனுக்கு பதிலடி கொடுத்த ஆர்கே சுரேஷ்!
சென்னை: நடிகர் விஜய்யின் The greatest of all time படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கைக்கோர்த்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களுக்கு தானும் காரணமாக அமைந்து வருகிறார். இயக்குநர் ராம் டைரக்ஷனில் உருவாகிவரும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் யுவன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஆர்கே சுரேஷ் இயக்கம், நடிப்பில் உருவாகவுள்ள தென்மாவட்டம் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தகவலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார். இந்தப் படத்தில் தான் பணியாற்றவில்லை என்றும் இந்தப் படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த ட்வீட்டிற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் ஆர்கே சுரேஷ். ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்கே சுரேஷ் பெயர் அடிபட்ட நிலையில் அவரது இயக்கம் மற்றும் எழுத்தில் உருவாகவுள்ள தென் மாவட்டம் படத்தில் யுவன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மற்றும் இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழுமலை ஆகிய படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி செயல்பட்டு வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பில் மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சிகளிலும் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆர்கே சுரேஷின் இயக்கம் எழுத்து மற்றும் நடிப்பில் உருவாக உள்ள தென் மாவட்டம் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக போஸ்டர் வெளியானது.
யுவன் சங்கர் ராஜா ட்வீட்: ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்கே சுரேஷின் பெயர் அடிபட்டதுடன் மட்டுமல்லாமல் தென்மாவட்டம் படம் சாதிய அடிப்படையில் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தான் பணியாற்றவில்லை என்றும் இந்தப் படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை என்றும் ட்வீட் மூலம் மீடியாவினருக்கு யுவன் சங்கர் ராஜா தெளிவுபடுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் ட்வீட்டிற்கு தற்போது ஆர்கே சுரேஷ் பதில் ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் சரியாக பார்க்கும்படியும் அவர் கூறியுள்ளார்.

பதிலடி கொடுத்த ஆர்கே சுரேஷ்: தனக்காக ஒரு படத்தில் இசையமைக்கவும் மற்றும் ஒரு இசைக் கச்சேரியில் பங்கேற்கவும் ஒப்பந்தத்தில் யுவன் சங்கர் ராஜா கையெழுத்திட்டுள்ளதையும் ஆர்கே சுரேஷ் குறிப்பிட்டு யுவன் சங்கர் ராஜாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனிடையே, மாமனிதன் படத்தின் வெளியீட்டின் போது யுவன் சங்கர் ராஜா பல்வேறு நெருக்கடியில் இருந்ததாகவும் அந்த சமயத்தில் அதிலிருந்து அவர் மீள்வதற்கு நிதியுதவி செய்ததாகவும் பிரச்சினைகளை ஒரே நாளில் முடித்துக் கொடுத்ததாக ஸ்டூடியோ 9 புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில்ம் குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தத்தை சரியா பாருங்க: மேலும் ஒப்பந்தத்தை சரியாக பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திப்போம் தென் மாவட்டத்தில் என்றும் கூறியுள்ளது. இதனால் யுவன் சங்கர் ராஜாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்கே சுரேஷ் மற்றும் ஸ்டூடியோ 9 புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த ட்வீட்கள் அமைந்துள்ளன. இதற்கு யுவன் சங்கர் ராஜா எந்த விதமான பதில் கொடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள தற்போது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











