சினிமா பைனான்சியரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகர்.. வைரலாகும போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகரான ஆர்கே சுரேஷ், சினிமா பைனான்சியரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.
Recommended Video
தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ்.
இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார்.

தாரை தப்பட்டை
கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆர்கே சுரேஷ். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாசக்கார நண்பன்
மருது படத்தில் மிரட்டல் வில்லனாக அலற விட்டிருப்பார் ஆர்கே சுரேஷ். அதேபோல் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் சமுத்திரக்கனிக்கு பாசக்கார நண்பனாக நடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஆர் கே சுரேஷ்.

நின்று போன திருமணம்
இந்நிலையில் சீரியல் நடிகை திவ்யாவுடன் கடந்த 2017-ம் ஆண்டு சுரேஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது.

பைனான்சியர் மது
இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண விழாவில் இரண்டு குடும்பங்களையும் சேர்ந்த வெறும் 15 பேர் மட்டுமே பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரைவெசியை மதியுங்கள்
தனது திருமணம் குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து, தனது திருமண போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சுரேஷ், ஆமாம் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்னுடைய பிரைவெசியை மதியுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











