Vettaiyan: வேட்டையன் படம் லட்டுகளின் பேக்கேஜாக இருக்கப்போவுது - ரோபோ சங்கர் ஃபேமிலி எக்ஸ்பெக்டேசன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் 10ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில், படம் குறித்து நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி என இருவரும் நமது ஃபிலிமி பீட் யூடூயூப் சேனலில் தங்களது கருத்தினைப் பகிர்ந்துள்ளனர் அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
வேட்டையன் படத்தினை ஜெய் பீம் என்ற படத்தினை இயக்கி இயக்குநராக அறிமுகமான தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படம் குறித்தும் படத்தின் ட்ரைலர் குறித்தும் நடிகர் ரோபோ சங்கரும் அவரது மனைவியும் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ரோபோ சங்கர் பேசுகையில், " ஜெய் பீம் படத்தின் இயக்குநர், வேட்டையன் படத்திலும் பெண்களுக்கான ஒரு நல்ல கருத்தினைக் கூறியிருப்பார் என நினைக்கின்றேன். அதனைத் தலைவர் மூலமாக மக்களுக்கு சொல்ல முயற்சி செய்திருப்பார். படத்தில் பெரும் நடிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. குறிப்பாக அமிதாப் பச்சன் இருக்கின்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரையும் திரையில் பார்க்கவுள்ளோம். சூப்பர் ஸ்டாரா அமிதாப் பச்சனா என்றுதான் இருக்கப்போகின்றது.
ரசிகர்களுக்கு தீனி: ரஜினி சார் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக நாம் பயப்படவேண்டியது இல்லை. ஆண்டு முழுவதும் நடிக்கின்றார். அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை. ரசிகர்களுக்கு தனது நடிப்பின் மூலம் தீனி கொடுக்க கொடுக்க இன்னும் அழகாகிக் கொண்டும் மெருகாகிக் கொண்டும் இருப்பார். சும்மா, காய்ச்சல், தலைவலி போல் இருக்கும். தலைவரின் ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளோம். அடுத்து கூலி படத்துக்காகவும் காத்துக் கொண்டு உள்ளோம். வருசத்துக்கு ரெண்டு படம் கொடுத்தால் ஓ.கே" என பேசினார்.

தங்கம்: ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா பேசுகையில், " சூப்பர் ஸ்டார், உலகநாயகன் என இவர்கள் இருவருக்கு மட்டும் ஏன் வயசே ஆகமாடிங்குது. தங்கத்தை நெருப்பில் காய்ச்ச காய்ச்ச அது எப்படி பொலிவு பெற்றுக் கொண்டே இருக்குமோ அதேபோல் படத்திற்கு படம் இவர்கள் இருவரும் படத்திற்கு படம் இளமையாகிக் கொண்டே போகின்றார்கள். ட்ரைலரில் சூப்பர் ஸ்டாரின் என்ரியைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. பெரிய திரையில் பார்க்க ஆசையாக உள்ளது. பிக் பாஸ் அமிதாப் பச்சன் படத்தில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், பல நடிகர்கள் நடித்துள்ளனர். பேக்கேஜ் ஆஃப் லட்டுகள் இந்தப் படத்தின் மூலம் கொடுக்கவுள்ளனர்.

வேண்டுதல்: சூப்பர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் வருத்தமாக இருந்தது. எங்கள் குல தெய்வ கோவிலில் அவர் சீக்கிரம் குணமாகவேண்டும் என வேண்டிக்கொண்டேன். அவரை பலமுறை நேரில் சந்தித்துள்ளேன். அவருக்கு எப்போதும் எதுவும் ஆகக் கூடாது. என்றைக்கும் அவர் நம்மை மகிழ்வித்துக்கொண்டே இருப்பார்" என பேசினார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கு மருத்துவமனையில் இருந்ந்து வீடு திரும்பியுள்ளார். இந்தத் தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











