கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா? கணவரிடம் சரக்கை பிடுங்கி.. இந்திரஜா செய்த வேலையை பாருங்க!

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவரின் வளைகாப்பு விழா, இந்த மாதம் மிகவும் தடபுடலாக நடைபெற்றது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக இருக்கிறார் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய், இந்திரஜாவை குண்டு என்று திட்டும் காட்சியில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்று இருந்தார்.அந்த படத்தை தொடர்ந்து, விருமன் படத்தில் நடித்திருந்தார்.

indraja shankar karthick instagram

நடிகர் ரோபோ ஷங்கர்: அதன் பின் இந்திரஜா படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். இவர் ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின், திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ரோபோ சங்கர். இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

வளைகாப்பு விழா: தற்போது இந்திரஜா கர்ப்பமாக இருப்பதால்,கடந்த 6ந் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த வளைகாப்பு விழாவையும் ரோபோ ஷங்கர் திருமணத்தை போல அட்டகாசமாக நடத்தி இருந்தார். அந்த விழாவில் பேசிய

இந்திரஜா செய்த வேலை: நிறைமாத கர்ப்பமாக இருக்கும் இந்திரஜா இணையத்தில் அவ்வவ்போது வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்திரஜாவின் கணவர் பீர் பாட்டிலுடன் இருக்க அதை பிடுங்கி வைத்துக்கொண்டு, இனி மேல் இதுதான் என்று DIAPER கையில் கொடுத்து, இதுக்கு அப்புறம் இதுதான் என்றும், இதுதான் புத்தாண்டு பிளான் என்று கேப்ஷன் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ஆமாம் இனிமேல் குழந்தையை பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X