Ajithkumar: அஜித்திடம் இருந்து வாங்கிய சிகரெட்.. பொக்கிஷமாக பாதுகாக்கும் ரோபோ ஷங்கர்!

சென்னை: நடிகர் அஜித் பல ஆண்டுகளாக தமிழில் மிகச்சிறப்பான நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரியில் இவரது துணிவு படம் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான நிலையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து இவரது அடுத்தப்படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அடுத்தப்படமான குட் பேட் அக்லி படமும் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ajithkumar vidaamuyarchi movie robo shankar

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படம் தீபாவளிக்கே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் தாமதத்தால் அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக விடாமுயற்சி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்த நிலையில், அங்கு நிலவிய காலச்சூழல் படப்பிடிப்பிற்கு ஏற்றபடி இல்லாததால் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய 6 மாதங்கள் தள்ளிப் போனது. இதையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

விடாமுயற்சி படம்: படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நடிகர் அஜித் எப்போதுமே தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களுடனும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணக்கமாக இருந்து வருபவர். இவரது ரசிகர்களும் இவரை தல என்று கொண்டாடி வந்த நிலையில், தன்னுடைய தல பட்டத்தை தூக்கி எறிந்தவர். தனக்காக ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளவேண்டாம் என்பதையும் அஜித் உறுதியாக கூறியிருந்தார். ஆயினும் அஜித்தை கடவுள் ரேஞ்சுக்கு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரோபோ ஷங்கர் பாராட்டு: சமீபத்தில் கடவுளே அஜித்தே என்ற முழக்கம் வெளிநாட்டு ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ளார். ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் தம் அடிக்கப் போறீங்களா என்று அஜித் தன்னிடம் கேட்டதாகவும் தானும் ஆமாம் சார் என்று கூறியதாகவும் ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னிடமிருந்து சிகரெட்டை வாங்கி பார்த்த அஜித், தான் எப்படியெல்லாம் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன் தெரியுமா என்று கேட்டதையும் ரோபோ ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

பொக்கிஷமாக பாதுகாக்கும் ரோபோ ஷங்கர்: இதையடுத்து அவரிடமிருந்து அந்த சிகரெட்டை அப்படியே வாங்கி, அதை தான் பத்திரமாக வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் ரோபோ ஷங்கர். தொடர்ந்து தான் சிகரெட் பிடிப்பதை விட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறிய அஜித், கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் இதை விட்டுடுங்க ஷங்கர் என்று தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். துணிவு படம் கடந்த ஜனவரியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து 2 ஆண்டுகள் அஜித்தின் படங்கள் ரிலீசாகாததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தும் வகையில் சில மாத இடைவெளிகளிலேயே அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X