அத்தியாயம் முடிஞ்சிடுச்சுனு சொன்னீங்களே.. இப்போ பாருங்க.. விஸ்வரூபம் எடுத்த ரோபோ சங்கர்!

சென்னை: ரோபோ சங்கரின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களின் வாயை அடைக்கும் வகையில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு அசத்தி உள்ளார்.

Actor Robo Shankar participated in the Mr. Madurai bodybuilding competition 2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ரோபோ சங்கர்: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு திடீரென மாறினார் இவரின் இந்த நிலைமையைப் பார்த்து அவரது ரசிகர்கள் பதறிப்போனார்கள். இதையடுத்து அவரது மனைவி, அவர் நலமாக தான் இருக்கிறார். அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக கூறியிருந்தார்.

குடிப்பழக்கம் காரணம்: இந்த நேரத்தில் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், ரோபோ சங்கரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை அவரின் குடிப்பழக்கம் தான் அவரின் இந்த நிலைக்கு காரணம் என்று பேசி இருந்தார். இதுபற்றி பேசிய ரோபோ ஷங்கர், நான் உடல் நலம்பாதிக்கப்பட்டதைவிட யூடியூப்பில் என்னைப்பற்றி வந்த வதந்தி தான் மிகவும் என்னை வேதனைப்படுத்தியது. ரோபோ சங்கரின் அத்தியாயம் முடிந்துவிட்டது, இனி ரோபோ சங்கர் அவ்வளவு தான் என பலர் சந்தோஷப்பட்டார்கள் என்று வேதனைப்பட்டார்.

Actor Robo Shankar participated in the Mr. Madurai bodybuilding competition 2023

விஸ்வரூபம் எடுத்து இருக்கிறேன்: மனைவி, குழந்தைகளால் பழையபடி மீண்டு வந்துள்ள ரோபோ சங்கர் மதுரையில் நடைபெற்ற 37வது ஆணழகன் போட்டியில் சிறப்பு அழைப்பாளர் பிரிவில் பங்கேற்று அசத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கர் 23 ஆண்டுகளுக்கு பின் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் படுத்த படுக்கையாகிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால், அதை எல்லாம் தாண்டி வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X