மெழுகு சிலை போல இருக்கிறார்.. பார்த்துட்டே இருக்கலாம்.. நடிகையை பார்த்து ஜொள்ளுவிட்ட ரோபோ சங்கர்!
சென்னை: பிரபல நடிகை குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் ரோபோ சங்கர் அவர் மெழுகு சிலை போல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

ராய் லக்ஷ்மி படங்கள்
தற்போது சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21 ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் கன்னடத்தில் ஜான்ஸி ஐபிஎஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதேபோல் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் ராய் லக்ஷ்மி.

3 கதாப்பாத்திரங்களில் ராய் லக்ஷ்மி
ராய் லக்ஷ்மி தமிழில் நடிக்கும் சிண்ட்ரெல்லா படம் ஹாரர் பேய் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி 3 கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது.

வினோ வெங்கடேஷ் இயக்கம்
இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்தவர். 'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராய் லக்ஷ்மியை புகழ்ந்த நடிகர்
முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் நடிகை ராய் லக்ஷ்மியை புகழ்ந்து பேசினார்.
Recommended Video

அழகை வர்ணித்த ரோபோ சங்கர்
அப்போது அவரது அழகை வர்ணித்து பேசியுள்ளார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். அவர் பேசியதாவது, சிண்ட்ரெல்லா திரைப்படம் சிறப்பாக இருக்கும். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் ராய் லக்ஷ்மியுடன் ஒரு காட்சி இருக்கிறது.

ஒரு மெழுகு சிலை போல்
அந்த காட்சியில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும். நான் பேசும் போது, எந்த நடிகையாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ராய் லக்ஷ்மி அந்த வசனங்களை ரசித்தார். ஒரு மெழுகு சிலை போல் அழகாக இருக்கிறார் ராய் லட்சுமி. அவரை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது.. இவ்வாறு நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











