Robo Shankar: படுத்தப்படுக்கையாக இருந்த நான் மீண்ட ரகசியம்.. சீக்ரெட் சொன்ன ரோபோ சங்கர்!
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் மிகவும் முக்கியமானவர்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவந்த ரோபோ சங்கர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து ஐந்து மாதங்கள் படுத்தப்படுக்கையாகி உடல் இளைத்து சாவின் எல்லைக்கே சென்று மீண்டு வந்ததாக ரோபோ சங்கர் தனது பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார்.

உடல்நல பாதிப்பிலிருந்து மீண்ட ரகசியம் பகிர்ந்த ரோபோ சங்கர்: நடிகர் ரோபோ சங்கர் சின்னத்திரையில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பான பர்பார்மென்சை கொடுத்தவர். இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இயல்பான டைமிங் காமெடியால் தன்னுடைய ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்தார் ரோபோ சங்கர்.
தொடர்ந்து பிசியாக நடித்துவந்த ரோபோ சங்கர், திடீரென காணாமல் போனார். திடீரென உடல் எடை குறைந்த நிலையில் அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தன. சினிமாவிற்காக அவர் உடல் எடை குறைத்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, அவர் சாவின் விளிம்பிற்கே சென்று மீண்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தன்னிடம் இருந்த சில கெட்ட பழக்க வழக்கங்களால் தான் 5 மாதங்கள் படுத்த படுக்கையாகி விட்டதாகவும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் தனக்கு மிகுந்த உதவிகரமாக இருந்ததாகவும் அவர் அடுத்தடுத்த பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே தன்னுடைய மகளின் திருமணம் குறித்தும் அவர் அறிவிப்பு வெளிட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய உடல்நிலை குறித்து அவர் பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அழகான ராட்சசிகள் படத்தின் இசை வெளியீட்டில் குடும்பத்துடன் கலந்துக் கொண்ட ரோபோ சங்கர், பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். தனக்கேயுரிய காமெடி சென்சுடன் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரையும் வம்பிழுத்த ரோபோ சங்கர், ஒரு கட்டத்தில் மிகவும் சீரியசாக தன்னுடைய உடல்நிலை குறித்து பேசினார். சிரித்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கை மிகுந்த அழகாக மாறிவிடும என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 5 மாதங்களாக படுத்தப்படுக்கையாக இருந்த தான் அதிலிருந்து மீண்டு வந்ததற்கு தன்னுடைய குடும்பமும் சிரிப்பும்தான் காரணம் என்றும் ரோபோ சங்கர் தொடர்ந்து பேசினார். தற்போது தன்னுடைய குடும்பமே இணைந்து உடற்பயிற்சி செய்வதாகவும் உணவுப்பழக்கத்துடன் உடற்பயிற்சியும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்பெல்லாம் தன்னுடைய மனைவி உட்கார மூன்று இருக்கைகள் தேவைப்படும என்றும் தற்போது தொடர் உடற்பயிற்சிகளால் அவரால் ஒரே இருக்கையில் உட்கார முடிவதாகவும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மேலும் பழைய கஞ்சியும் வெங்காயமும் மிகச்சிறந்த உணவாக தனக்கு தெரிவதாகவும் ரோபோ சங்கர் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தன்னுடைய மருமகன் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும், இந்தப் படம் நிறைவடையும்போது 6 மாதத்தில் நல்ல செய்தி ஒன்று வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திரஜாவின் திருமணம் குறித்த செய்தியாக அது இருக்கும் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











