உண்மைய பேசினா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல.. ரஜினிக்கு ஆதரவாக வரிந்துகட்டிய பிரபல நடிகர்!

Recommended Video

மன்னிப்பு கேட்க மாட்டேன் | SUPERSTAR RAJINI PRESSMEET | THUGLAK MAGAZINE ISSUE | FILMIBEAT TAMIL

சென்னை: பெரியார் குறித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு பிரபல நடிகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரியார் குறித்து பேசியதற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

அப்போது பேசிய அவர், தான் கற்பனையில் பேசவில்லை என்று கூறி ஆதாரங்களை காண்பித்தார். மேலும் பெரியார் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

ரஜினிகாந்த் நேற்று கொடுத்த செய்தியாளர் சந்திப்புதான் இன்றும் ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது. அதேநேரத்தில் ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

ரோபோ சங்கர்

ரோபோ சங்கர்

நடிகை குஷ்பு, மீரா மிதுன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஏன் எரியுதுன்னு தெரியல

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தலைவர் எப்போவும் உண்மைய பேசிடுறாரு.. உண்மைய சொன்னா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல என்று தெரிவித்திருக்கிறார்.

ரீடிவிட்

ரீடிவிட்

மேலும் #IStandWithRAJINIKANTH என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் ரோபோ சங்கர். அவரது இந்த டிவிட்டை பலரும் ரீடிவிட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X