நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை.. ஹைகோர்ட் அதிரடி!

By Sivam

சென்னை: நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில், சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கயது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்க மறுக்கப்பட்டது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது.

Actors association to conduct a fresh election: The Madras High Court interim Ban

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்து எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.

நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார் .வாக்காளர் பட்டியலை சரிபார்க்க பட வேண்டும் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில், நடிகர் சங்கத்திற்கு தேர்தலை நடத்தி முடிக்க 35 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், அதில் 80 % வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பல மாதங்களாக வாக்குகள் எண்ணாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையெல்லாம் தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதாக வாதாடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தனிநீதிபதி பிறபித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அதே வேலையில் நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என குறிப்பிட்டு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X