»   »  நடிகரின் பாலியல் தொல்லை... கங்கனா ஒரு பைத்தியம்... பாலிவுட்டில் பரபரப்பு!

நடிகரின் பாலியல் தொல்லை... கங்கனா ஒரு பைத்தியம்... பாலிவுட்டில் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : நடிகை கங்கனா ரனாவத் ஜெயம் ரவி ஜோடியாக 'தாம்தூம்' படத்தில் நடித்தவர். 'குயின்' படத்தில் நடித்த இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றிருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கும், நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதில் பிரச்னை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்தனர்.

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி நாயகியாக இருக்கும் கங்கனா, தனது தந்தை வயதுள்ள பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பேட்டி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹவுஸ் அரெஸ்ட் :

ஹவுஸ் அரெஸ்ட் :

'நடிகரும் தயாரிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி, எனக்குத் தனியாக வீடு ஒன்றை எடுத்துக் கொடுத்திருந்தார். அங்கு என் நண்பர்களை அவர் அனுமதிக்க மாட்டார். கிட்டத்தட்ட வீட்டுச்சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தேன்.

பாலியல் தொல்லை :

பாலியல் தொல்லை :

அங்கு தங்கியிருந்தபோது ஆதித்யா பஞ்சோலி எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது நான் மைனர். அவரது மகளின் வயதை விட எனக்கு ஒரு வயது குறைவு. தந்தை வயதில் இருக்கும் அவர் எனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

மனைவியிடம் புகார் :

மனைவியிடம் புகார் :

ஆதித்யாவின் தொல்லை குறித்து அவரது மனைவியிடம் புகார் செய்தேன். இது பற்றி எனது பெற்றோரிடம் சொல்ல முடியாது, என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கெஞ்சினேன். ஆனால், அவரது மனைவியோ, 'அவர் இல்லாமல் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம்' எனத் தெரிவித்துவிட்டார்.

கங்கனா ஒரு பைத்தியம் :

கங்கனா ஒரு பைத்தியம் :

இந்நிலையில், 'கங்கனா ரனாவத் ஒரு பைத்தியம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். பைத்தியக்காரர்கள் இதுபோன்று பேசுவது உங்களுக்கு வருத்தத்தை அளிக்காதா என ஆதித்யா பஞ்சோலி தெரிவித்துள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டு :

பொய்யான குற்றச்சாட்டு :

இத்தனை வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கும் என்னை இதுபோன்று வேறு யாராவது பேசியது உண்டா? கங்கனா பொய்யான தகவலைக் கூறி வருகிறார். அவரது பேட்டியால் நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.

நடவடிக்கை :

நடவடிக்கை :

கங்கனா ரனாவத் கூறியதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அவர் மீது நானும் எனது மனைவியும் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்போம்' எனக் கூறியிருக்கிறார் ஆதித்யா.

English summary
'Aditya pancholi has sexually harassed me', says kangana ranaut. For which Aditya says 'She is mad, Who talks like that? I will take legal action'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil