ரஜினியை குறை கூறுவது அராஜகம்.. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. எஸ்.வி.சேகர் பாய்ச்சல்!

சென்னை : நடிகர் ரஜினி கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்று நடிகர் எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

நேதாஜி 124வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின் எஸ்.வி சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

actor s.ve.sekar press meet

அப்போது பேசிய அவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் முக்கியமானவர் எனவும் அவரது போர்குணம் எல்லோருக்கும் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பெரியார் குறித்து இல்லாத ஒன்றை கூறியதாக அனைவரும் நடிகர் ரஜினியை குறைகூறுவது அராஜகம் எனவும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் சமமான ஒன்று எனவும் தெரிவித்தார்.

actor s.ve.sekar press meet

மேலும், ஈ.வெ.ரா பேசிய காலத்தில் இவ்வளவு தொலைக்காட்சிகள் இல்லை எனவும் அவரது கருத்துகள் குறித்து மறுப்புகள் வரும்போது அது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரமே வேண்டாம் என பெரியார் பேசியதாக கூறப்படுகிறது. வரலாற்றை யாரும் எளிதாக மறைத்துவிட முடியாது என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X