அடக் கொடுமையே! சினிமாவில் போதை மாத்திரை பழக்கம்.. பரபர புகாரால் நின்று போன நடிகரின் திருமணம்!

By

பெங்களூரு: சினிமாவில் போதை பொருள் புழக்கம் பற்றிய செய்தி பரபரப்பானதை அடுத்து பிரபல நடிகர் ஒருவர் திருமணம் நின்று போனதாக செய்தி வெளியாகி உள்ளது.

Recommended Video

அரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி- வீடியோ

சினிமாவில் போதைப் பொருட்கள் அதிகமாக புழங்கப்படுவதாக நடிகை கங்கனா ரனவத் கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் கூறினார்.

'ரத்த பரிசோதனை நடத்தப்பட்டால், அனைத்து டாப் ஹீரோக்களும் கம்பி எண்ணுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

போதை மாத்திரை

போதை மாத்திரை

இந்நிலையில், பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்ற அனிகா என்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அனிகா சில டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்தனர். அதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

கன்னட சினிமா

கன்னட சினிமா

அனிகாவுக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததாகவும் தெரியவந்தது. இவர்கள் வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி, நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு

போதைப் பொருள் தடுப்பு

இதையடுத்து அனிகாவிடம் போதை மாத்திரைகளை வாங்கிய நடிகர்கள், நடிகைகள், இசை அமைப்பாளர்கள் உள்பட கன்னட திரையுலகினரிடம் விசாரணை நடத்த, போதைப் பொருள் தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில், கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், இந்த போதைப் பொருள் விஷயம் பற்றி பேட்டி அளித்திருந்தார். இது பரபரப்பானது.

நடிகர் பவன் சவுரியா

நடிகர் பவன் சவுரியா

இந்நிலையில், இந்த விவகாரத்தால் கன்னட நடிகர் ஒருவர் திருமணம் இந்த விவகாரத்தில் நின்று போயிருக்கிறது. பிரபல கன்னட நடிகர் பவன் சவுரியா. ஹாலி துப்பா, லூகிகட்டி, உடும்பா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் அளித்தபேட்டியில், கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருப்பது உண்மைதான் என்று கூறியிருந்தார்.

திருமணம் நின்றது

திருமணம் நின்றது

தனக்குத் தெரிந்த சில இளம் நடிகர்கள் இந்த பழக்கதில் இருப்பதாகவும் அவர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இதனால் நடிகர் பவன் சவுரியாவும் போதைப் பொருள் பயன்படுத்துவாரோ என்ற பயத்தில், பெண் வீட்டார் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டதாக, கன்னடத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X