Sai Srinivas :ராஷ்மிகாவுடன் காதலா.. இது என்ன கூத்தா இருக்கு.. சாய் ஸ்ரீநிவாஸ் விளக்கம்!
ஐதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ்ஷாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த பான் இந்தியா படங்கள் ரிலீசாகி வருகின்றன.
விஜய்யுடன் இவர் நடிப்பில் வெளியான வாரிசு படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழிலும் வானவில் என்ற படத்தில் அடுத்ததாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

ராஷ்மிகாவுடன் டேட்டிங் குறித்து விளக்கம் அறித்த சாய் ஸ்ரீனிவாஸ் : நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்லும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து இவர் பாடல்காட்சிகளில் சிறப்பான பர்பார்மென்சை கொடுத்திருந்தார். முன்னதாக நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இருவரும் இதுகுறித்து மௌனம் சாதித்த நிலையில், வெளிநாடுகளில் இருவரும் ஒன்றாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகி இதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன. ஆனால், இருவரும் தொடர்ந்து மௌனம் சாதித்தனர்,

தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ராஷ்மிகா மந்தனா. இவரை ஏறக்குறைய 4 கோடி பேர் பாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது புதிய ஹேர்ஸ்டையில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா, தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாசை காதலிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரவி வருகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக விமான நிலையம் வரும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் சாய் ஸ்ரீனிவாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

தான் ராஷ்மிகாவை காதலிக்கவில்லை என்றும் ஐதராபாத்திலிருந்து மும்பைக்கு தான் அடிக்கடி போகும்போது ராஷ்மிகாவை பார்க்க நேர்வதாகவும் ஏர்போர்ட்டில் தாங்கள் இருவரும் ஒன்றாக போவதைப் பார்த்து, தாங்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் விஜய் தேவரகொண்டா விஷயம் போலவே இந்த விவகாரத்திலும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











