தொழிலதிபரை தாக்கிய வழக்கு: சயீப் அலிகான் கைதாகி விடுதலை
மும்பையின் தாஜ் ஓட்டலில், தனது காதலி கரீனா, நடிகை கரீஷ்மா கபூர் மற்றும் அவரது கணவருடன் உணவருந்தச் சென்றிருந்தார் சயீப். நடிகை அம்ரிதா அரோரா உள்பட மேலும் சிலரும் உடனிருந்தனர்.
அப்போது இக்பால் சர்மா, அவரது மாமனார் ஆகியோருக்கும் சயீப் அலிகானுக்கும் தகராறு நடந்துள்ளது.
இக்பால் சர்மா புகாரின் பேரில் கோல்பா போலீசார் முதலில் சயீப் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சயீப் அலிகானை அவரது வக்கீல் அறையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் சயீப் அலிகான் பதினைந்தாயிரம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து சயீப் கூறுகையில், இந்த விவகாரத்தில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகள் உண்மையை சொல்லும்.
என்னுடன் வந்த பெண்கள் மற்றும் நண்பர்களை மிகக் கேவலமாகப் பேசியவர் இக்பால்தான். அவர் மாமனார்தான் என்னை முதலில் அடித்தார். நேற்று இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தடுக்கும் முயற்சியில்தான் நான் ஈடுபட்டேன். ஓட்டலில் என்னுடன் இருந்த எனது நண்பரை அவமானப்படுத்தினர். இதற்காக நான் கோபப்பட்டது தவறா?, என்றார்.
சயீப் அலிகானும் தனது சார்பில் இக்பால் சர்மா மீது தனி புகார் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications












