‘‘வேதநாயகம்னா பயம்“ … பழம்பெரும் நடிகர் சலீம் கௌஸ் காலமானார்!
மும்பை: சின்ன கவுண்டர் திரைப்படத்தில் சக்கர கவுண்டர் கதாபாத்திரத்தில் நடித்த சலீம் கௌஸ் காலமானார். அவருக்கு வயது 70.
Recommended Video
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான சலீம் கௌஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாக அவரது மனைவி அனிதா கௌஸ் தெரிவித்துள்ளார்
சலீம் கௌஸ் மறைவுக்கு திரைநட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகரின் இறுதிச் சடங்கு நாளை அதிகாலை நடைபெற்றது.

சலீம் கௌஸ்
சினிமாவில் கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு வில்லனும் டெரராக, மாஸாக இருந்தால் படத்திற்கே பிளஸ்ஸாக இருக்கும். அப்படி மாஸ் வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் சலீம் கௌஸ். முகம் முரட்டுத்தனமாக இல்லை என்றாலும், வில்லனுக்கே உரிய கம்பீரமான குரல் இருந்தால் இவரால் பல வெற்றி படங்களில், வில்லனாக வலம் வர முடிந்தது.

திரைப்பயணம்
சென்னையில் பிறந்து வளர்ந்த சலீம் கௌஸ்,சென்னை மாநிலக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். பின்னர், குடும்பத்துடன் மும்பையில் செட்டிலானார். சலீம் கௌஸ் 1978ம் ஆண்டு 'ஸ்வர்க் நரக்' எந்த திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து சக்ரா, சரண்ஷ், மோகன் ஜோஷி ஹசிர் ஹோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சக்கர கவுண்டர்
விஜய்காந்த் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படத்தில் படு மோசமான வில்லனாக சக்கர கவுண்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் வந்தன. வெற்றி விழா, திருடா திருடி, தாஸ், ரெட் போன்றபடங்களில் நடித்திருந்தார்.

வேதநாயகம்னா பயம்
விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் படத்தில் முரட்டு வில்லனாக நடித்து விஜய்க்கே டஃப் கொடுத்து இருப்பார் சலீம் கௌஸ். அந்த படத்தில் பயம்னா வேதநாயகம்... வேதநாயகம்னா பயம் என்று அலட்டிக் கொள்ளாமல் குரலிலும் பார்வையிலும் கம்பீரத்தை காட்டி அவர் பேசிய வசனம் இன்று டிராண்டிங்கில் உள்ளது.

காலமானார்
சலீம் கௌஸிற்க்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் அவருக்கு வயது 70. மூத்த பழம் பெரும் நடிகரின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











