ஐஸ்வர்யா ராயுடன் காதலில் இருந்த சல்மான் கான்.. அப்படியெல்லாம் செய்தாரா?
மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) நள்ளிரவில் நடிகர் சல்மான் கான் நடிகை ஐஸ்வர்யா ராயின் வீட்டு கதவை தட்டியிருக்கிறார்.
உலக அழகி பட்டத்தை இந்தியாவில் எத்தனை பேர் வாங்கினாலும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய்தான். அந்த அளவுக்கு அவர் தன்னுடைய தாக்கத்தை பலரிடம் செலுத்தியிருக்கிறார். பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராய் கடந்த 1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் வென்று புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகம்: உலக அழகி பட்டம் வென்றவுடன் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. அதன்படி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உருவான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் மணிரத்னத்தின் இயக்கமும், ஐஸ்வர்யா ராயின் அழகும் திறமையும் பலரது கவனத்தை ஈர்த்தது.
பாலிவுட்டில் பிஸி: தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் அடுத்தடுத்து பாலிவுட்டில் பிஸியானார். எந்த அளவுக்கு என்றால் ஒரே நாளில் 5 முதல் ஆறு படங்கள் நடிக்கும் அளவுக்கு பிஸியானார். பாலிவுட்டில் பிஸியாக இருந்தாலும் தமிழிலும் அவ்வப்போது செலக்ட்டிவ்வாக நடித்து வந்தார். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படங்களில் நடித்தார்.
பொன்னியின் செல்வன்: அவர் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது கணவர் அபிஷேக் பச்சன்கூட ஐஸ்வர்யா ராயின் கரியரில் நந்தினி கதாபாத்திரம்தான் பெஸ்ட் என்று புகழ்ந்தது கவனிக்கத்தக்கது.
சல்மான் கானுடன் காதல்: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு சல்மான் கானை காதலித்தார். இருவரது காதலும் பாலிவுட் முழுக்க தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் அவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். தனியார் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் தீவிரமாக காதலித்தார்கள். ஒருகட்டத்தில் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார் சல்மான் கான்.
ஆனால் அந்த சமயத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய கரியரின் பீக்கில் இருந்ததால் திருமணத்துக்கு இசையவில்லை. இருந்தாலும் காதல் குறையவில்லை. அப்போது சல்மான் கானுக்கு எதிரானவர்கள் ஐஸ்வர்யா ராயிடம் சென்று கண்டதையெல்லாம் சொல்லி மனதை குழப்பினார்கள். ஒருகட்டத்தில் ஐஸ்வர்யா ராயும் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போதுதான் ஐஸ்வர்யா ராய் குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு நள்ளிரவில் சென்று கதவை தட்டிவிட்டார். ஆனால் ஐஸ்வர்யாவோ கதவை திறக்கவில்லை. தொடர்ந்து கோபத்துடன் தட்ட தட்ட சல்மான் கானின் கையில் ரத்தம் எல்லாம் வந்துவிட்டது. பிறகு கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் ஐஸ்வர்யாவிடம் வந்த சல்மான் கான் காதலிக்கிறியா இல்லையா என்று கேட்க ஐஸ்வர்யா ராய் இல்லவே இல்லை என்று கூறி பிரேக் அப் செய்துவிட்டார். இதனால் சல்மான் கான் விரக்தியின் உச்சத்துக்கே சென்றார்" என்றார்.


Click it and Unblock the Notifications