Salman khan: இது ரொம்ப டேஞ்சர்.. டைகர் 3 கொண்டாட்டம் குறித்து சல்மான் சொன்ன விஷயம்!
மும்பை: நடிகர் சல்மான்கான், கேத்ரினா கையிப் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டைகர் 3 படம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.
படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான் நடித்துள்ளது படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. அதிகமான ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது.
கேத்ரினாவிற்கு படத்தில் ஆக்ஷன் காட்சிகள் உள்ள நிலையில், அவரும் அதை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

நடிகர் சல்மான்கான்: நடிகர் சல்மான்கான், கேத்ரினா கையிப் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் டைகர் 3. தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ள இந்தப் படம் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலாக வெளியாகியுள்ளது. ரா உளவாளி அவினாஷ் சிங் ரத்தோர் என்கிற டைகராக சல்மான் கான் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பையும் ஆக்ஷன் காட்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது மனைவி ஸோயாவாக நடித்துள்ளார் கேத்ரினா கையிப்.
டைகர் 3 படம்: தன்னுடைய மகனை காப்பாற்றுவதற்காக ஆபத்தான டாஸ்க் ஒன்றை ஏற்று துருக்கிக்கு அவினாஷும் ஸோயாவும் செல்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. யஷ்ராஜ் பிலிம்சின் ஏக் தா டைகர், வார் படங்களின் வரிசையில் வெளியாகியுள்ளது டைகர் 3. இந்தப் படத்தில் ஒருபடி மேலே போய் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான சதியை முறியடித்து சல்மான்கான் எப்படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பெருமை சேர்க்கிறார் என்பதாக கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குநர் மனீஷ் ஷர்மா.
சல்மானை காக்கும் ஷாருக்கான்: படத்தில் அதிகமான லாஜிக் மீறல்கள், திரைக்கதையில் சுவாரஸ்ய குறைவு போன்றவை இருந்தபோதிலும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் அதை மறக்கடிக்க செய்கிறார் சல்மான்கான். இந்தப் படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் வந்து சல்மானை காப்பாற்றுவதும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் சல்மான் மட்டுமில்லாமல் கேத்ரினா கையிப்பும் மிரட்டுகிறார். பாகிஸ்தான் பிரதமராக சிம்ரன், ரா தலைவராக ரேவதி உள்ளிட்டவர்களும் படத்தில் கவனத்தை பெற்றுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த பிரம்மாண்டம்: தனுஜ் டிக்குவின் பின்னணி இசை, கதையோடு இணைந்து பலத்தை அளித்துள்ளது. அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் வெளிநாட்டு லொகேஷன்கள் ரசிகர்களை அதிகமாக கவர்கின்றன. படத்தின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. பாகிஸ்தானில் நடக்கும் க்ளைமாக்ஸ் காட்சி அதிக கவனத்தை பெறுகிறது. மொத்தத்தில் ஆக்ஷன் லவ்வர்களுக்கு இந்தப் படம் சிறந்த விருந்தாக அமைந்துள்ளது.
ரசிகர்களிடம் சல்மான் கோரிக்கை: படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானது. இதனால் உடன் படத்தை பார்த்த மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே இதுபோன்ற விஷயங்கள் மிகவும் ஆபத்தானவை என்று சல்மான்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தங்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாதவகையில் படத்தை கொண்டாடுமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் சல்மான் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











