சுஷாந்த் மரணம்.. சாபங்களையும் வசவுகளையும் பெரிதுபடுத்தாதீர்கள்.. சல்மான் கான் வேண்டுகோள்!
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்த் சிங் மரணத்திற்கு நடிகர் சல்மான் கான், கரன் ஜோஹர், ஆலியா பட், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

படங்களில் இருந்து நீக்கம்
சல்மான் கான்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு பட வாய்ப்புகளை வழங்கக் கூடாது என பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு தடை போட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே 6 மாதங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் ராஜ்புத் நீக்கப்பட்டுள்ளார்.

கொடும்பாவிகள் எரிப்பு
இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் சுஷாந்தின் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பல இடங்களில் சல்மான் கான் மற்றும் கரன் ஜோஹரின் கொடும்பாவிகளை எரித்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர்களுக்கு கோரிக்கை
கடந்த சனிக்கிழமை சல்மான் கானின் பீயிங் ஹியுமன் ஸ்டோருக்கு முன்னால் சுஷாந்தின் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களிலும் சல்மான் கானுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் டிவிட்டர் வாயிலாக ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சாபங்களை பொருட்படுத்தாமல்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். சுஷாந்த் ரசிகர்களுக்கு துணையாக நில்லுங்கள். அவர்களது சாபங்களையும் வார்த்தைகளையும் பொருட்படுத்தாமல் அதன் பின்னால் இருக்கும் உணர்வைப் பாருங்கள்.

இழப்பு மிகவும் வலிமிக்கது
நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு மிகவும் வலிமிக்கது என்பதால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவு தந்து அவர்களுடன் உறுதுணையாக நில்லுங்கள்.. இவ்வாறு நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











