கொரோனா வைரஸ் காரணமல்ல... பிரபல பாலிவுட் ஹீரோவின் மருமகன் திடீர் மரணம்... திரையுலகம் அதிர்ச்சி!

By

மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் மருமகன் திடீரென உயிரிழந்ததை அடுத்து, இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Actor & Dr.Sethu Last awarness Video | Zi CLinic | Dermatologist

பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவர் தபாங் 3 படத்துக்குப் பிறகு, பிரபுதேவா இயக்கும் ராதே படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக சினிமா படங்களின் ஷூட்டிங் தடை பட்டுள்ளது.

 சினிமா தொழிலாளர்கள்

சினிமா தொழிலாளர்கள்

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களில் 25 ஆயிரம் பேருக்கு, நடிகர் சல்மான் கான் கடந்த சில நாட்களுக்கு முன் பண உதவி அளித்துள்ளார்.

 பீயிங் ஹ்யூமன்

பீயிங் ஹ்யூமன்

இதை இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளன தலைவர் பி.என்.திவாரி உறுதிப்படுத்தி இருந்தார். அவர் கூறும்போது, சல்மான் தனது பீயிங் ஹ்யூமன் (Being human) அறக்கட்டளை மூலம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். எங்கள் அமைப்பில் 5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதில் தற்போது, 25,000 பேருக்கு பண உதவிகளை செய்து தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

 அப்துல்லா கான்

அப்துல்லா கான்

இந்நிலையில், சல்மான் கானின் மருமகன் அப்துல்லா கான், நேற்று திடீரென்று மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 38. உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மரணமடைந்தார். அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் இதய நோய் காரணமாக மரணமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

 எப்போதும் உன்னை

எப்போதும் உன்னை

அப்துல்லாவின் மரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள சல்மான் கான், அப்துல்லாவுடன் இருக்கும் கருப்பு வெள்ளை போட்டோவையும் பதிவிட்டுள்ளார். அதில் எப்போதும் உன்னை நேசித்துக் கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். அவரது மறைவை நம்ப முடியவில்லை என்றும் இது அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் நடிகர், நடிகைகள் கூறியுள்ளனர். பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எக்சர்சைஸ்

எக்சர்சைஸ்

அப்துல்லா கானுக்கும் இந்தி சினிமா துறைக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் நடிகர் சல்மான் கான் வெளியிடும் பல வீடியோக்களிலும் போட்டோக்களிலும் அப்துல்லா கான் தோன்றி இருக்கிறார். உடல்நலம் பேணுவதில் சிறந்தவர். எக்சர்சைஸ் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். நடிகர் சல்மான் கானுடன் எப்போதும் இருப்பார்.

ஸ்ட்ராங்

ஸ்ட்ராங்

கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் சல்மான் கான் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், அதிக எடையை கொண்ட அப்துல்லா கானை தூக்கி வைத்திருக்கும் சல்மான், 'நான் பீயிங் ஸ்ட்ராங் இந்தியா, ஆனால் அப்துல்லா, உண்மையான ஸ்ட்ராங்க் இந்தியா' என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X